நூறு திருக்குறளை வாழ்வியல் தொடர்பான நிஜ சம்பவங்களுடன் கேட்போருக்கு சலிப்பு தோன்றா வண்ணம் சுவைபட ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சிவகுமார்! ஏதோ மெஸ்மரிசம் செய்யப்பட்டவர்கள் போல பெருந்திரள் மக்கள் லயித்துக் கேட்ட அன்றைய நிகழ்வு ஒரு சிறப்பான அனுபவமானது..! நம் காலத்தில், தமிழகத்தில், முற்றிலும் வேறுபட்ட விதத்தில் திருக்குறளுக்கு ஓர் அரங்கேற்றம் நிகழ்ந்தது. “திருக்குறள் நூறு..!” என்கிற பெயரில் நடிகர் சிவகுமார் அவர்கள், தான் எழுதிய புத்தகத்தை அப்படியே மேடையில் வண்ண விளக்குகள் பளிச்சிட , மிகுந்த உயிரோட்டத்துடன் பச்சைத் தண்ணீர் கூட ...
இத்தனை நாட்களாகியும் ஒரு மாபெரும் அநீதிக்கு எதிராக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய் திறக்காமல் காட்டும் மெளனம், நுபூர் சர்மா கைது செய்யப்படாமல் இருப்பது, அதனால் நாடெங்கும் நடக்கும் போராட்டங்கள், வன்முறைகள்..அதை சாக்காக வைத்து இஸ்லாமியர்களை அடக்கத் துடிப்பது…! இஸ்லாமியர்களை அவதூறு செய்வதே வேலையாகக் கொண்டிருந்த நுபூர் சர்மாவிற்கு பாஜக செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்தது மட்டுமின்றி, அவர் அவ்வாறு பேசும் போதெல்லாம் ஊக்குவித்து உற்சாகப்படுத்தியவர்கள் தான் மோடியும், அமித்ஷாவும்! அதனால் தான் ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக கட்சியில் இருந்து ...
மற்ற மதத்தினரை கொன்றொழிக்க வெளிப்படையாக அறைகூவல் விடுத்த பிரபல இந்து சாமியார்களின் கொலைவெறிப் பேச்சுகள் அதிர்ச்சியளிக்கின்றன என்றால், அதற்கு எதிர்வினையாற்றாமல் இருக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் மெளனம் ஜன நாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை கலவரப்படுத்துகிறது. உத்திரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் பிரபல இந்து சாதுக்களின் அமைப்பான தர்மசந்த் நடத்திய மதப் பாராளுமன்றம் என்ற நிகழ்வில் மிக அதிர வைக்கும் இந்து சாமியார்களின் வன்முறையை தூண்டும் வெறித்தனமான பேச்சுகள் வெளிப்பட்டுள்ளன! இந்து ரக்ஷ சேனா என்ற அமைப்பின் தலைவரான சுவாமி பிரபோதானந்த் கிரி, பிரபல சாமியார் ...
ஜார்ஜ் பொன்னையா மாதிரியாக ஒரு நாலு பேரு இருந்தால் போதும் தமிழ்நாட்டில் இந்துமதவெறி இயக்கங்களும், பாஜகவும் ஒகோன்னு வளர்ந்திடும்! அந்த மதவாத தீக்கு நெய்யை வாளி நிறைய வாரி,வாரி ஊத்தி இருக்கிறார் பாதிரியார். இப்படி எவனாவது பேச மாட்டமாட்டானான்னு தானே இந்துத்துவ அறிவு ஜீவிகளும் காத்திருந்தாங்க..! இந்த மாதிரி சம்பவங்களை மிக நுட்மாக ஊதி, ஊதி இந்துக்களை அணிதிரட்ட அவங்களை போன்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவங்களும் ஜமாய்க்கிறாங்க..! சோஷியல் மீடியாவெங்கும் பாதிரியார் விதைத்த வெறுப்பு பன்மடங்கு விஸ்வரூபமெடுத்து வியாபித்துள்ளது! இந்த விவகாரத்தில் கன்னியாகும்ரி ...