நிவர் வந்தது, நிவாரணம் கொடுக்கப்படுகிறது என்பதோடு கடக்கும் விவகாரமல்ல இது! கடந்த 100 ஆண்டுகளில் சுமார் 300 க்கு மேற்பட்ட புயல்களை தென் இந்திய கடற்கரை பகுதிகள் சந்தித்துள்ளன! அதுவும் 2010 – 2020 காலகட்டத்தில் அரபிக் கடலில் ஏழு புயல்களையும் வங்களா விரிகுடாவில் 7 புயல்களையும் பார்த்துவிட்டோம்! அடுத்தடுத்து மிகக் குறுகிய இடைவெளிக்குள் மீண்டும்,மீண்டும் புயல்கள் வருவதன் காரணங்களை கண்டறிய வேண்டாவா? ஒரு புயலுக்கும், அடுத்த புயலுக்குமான இடைவெளி சுருங்கிக் கொண்டே வருவது ஒரு அபாய அறிவிப்பாகும்! எப்போதோ, ஆபூர்வமாக இயற்கை பேரிடர்கள் ...