நடிகன் என்பவன் சுய சிந்தனையாளனாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவன் தனிமைப்பட்டு போவான் என்பதற்கு நடிகர் ஸ்ரீகாந்த் வாழ்க்கை ஒரு நிதர்சனமான உண்மையாகும்! எழுத்தாளர் ஜெயகாந்தனோடு அவருக்கு இருந்த ஆழமான பிணைப்பு அவரது வாழ்க்கையில் பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது! ஸ்ரீகாந்த் ஒரு தீவிர இலக்கிய வாசகர்! ஜெயகாந்தனின் மிக நெருங்கிய நண்பர்! எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆழ்வார்ப்பேட்டை சபையில் ஸ்ரீகாந்த்தை அந்த நாட்களில் அடிக்கடி பார்க்கலாம்! ஜெயகாந்தனோடு தோழமை பாராட்டுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல, சற்று கரடு முரடானவர் ஜேகே! எந்த நேரம் ...