“சிவபுரம் சிவாயசி”என்கிற சிவனடியார்கள் அமைப்பின் நிர்வாகிகள் சென்னையில் சமீபத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவ தார்ணா மலர்மகள் பேட்டியின்போது கூறியது: “இந்தியாவில் , அகதி முகாம்களில் 65 ஆயிரம் ஈழத்தமிழர்களும் முகாமுக்கு வெளியே சுமார் 35 ஆயிரம் ஈழத்தமிழர்களும் வசிக்கின்றனர். இவர்களுக்கு  பல்வேறு உதவிகள் சலுகைகளை அரசு வழங்கிக் கொண்டிருந்த போதிலும், ஒரு வலி நிறைந்த வாழ்க்கை சூழலிலேயே இவர்கள் வாழ்கிறார்கள் ! அகதி முகாம்களில் பிறந்து வாழ்ந்த ஒரே காரணத்திற்காக மிகச் சிறந்த மாணவ மாணவியர் எத்தனையோ ...