சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர் ஒ.பி.எஸ்சுக்கு தற்போதைய ‘பாஸ்’ யார்? உங்கள் கேள்வியிலேயே அவர் தனக்கான பாஸ்களை மாற்றிக் கொள்பவர் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கிறது! அவரது முதல் பாஸ் டி.டி.வி தினகரன், அதற்குப் பிறகு சசிகலா, பிறகு ஜெயலலிதா, இதன் பிறகு மோடி, குருமூர்த்தி..என்பதாகத் தொடர்ந்தது. தற்போது எதிர் முகாமிலேயே தனக்கு பாதுகாப்பான பாஸ் ஒருவரை கண்டறிந்துள்ளார். ஒன்றிய அரசின் தயவை விட, உள்ளூர் அரசின் தயவால் தான் தன் அரசியல் எதிரிகளோடு மோத முடியும் என அவர் சமீபகாலமாக சார்ந்து நிற்கக் கூடிய ...
இருதயராஜ், திருப்போரூர், செங்கல்பட்டு பி.ஜே.பி எப்போது மத துவேஷத்தைக் கைவிடும்? கசாப்புக் கடைக்காரருக்கு எப்போது ஜீவகாருண்யம் தோன்றும் எனக் கேட்பது போல உள்ளது. பிழைப்பும்,தொழிலும் இது தான் என்றான ஒருவரை மாற்றுவது ரொம்ப கஷ்டம். சுரேஷ் குமார், கும்பகோணம் தஞ்சாவூர் தமிழக அரசும் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தோன்றுகிறதே? பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடும் அவசியத்திற்கே இடம் கொடுக்கவில்லை! பத்திரிகை முதலாளிகளே சலுகைகள், விளம்பரப் பணத்திற்கு ஆசைப்பட்டு சாஷ்டாங்கமாக விழுந்து தங்கள் சுதந்திரத்தை அடகு வைத்து விடுகின்றனரே! பாலமணி,சென்னை ஆன்மிகம் , அரசியல் மற்றும் ...
உலகில் அடிமைத் தனத்திற்கு பேர் போனதில் தமிழ் சினிமா துறையை மிஞ்ச வேறொன்றில்லை. திரைத் துறைக்கு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரை அரங்க உரிமையாளர் சங்கம்.. எனப் பல சங்கங்கள் உண்டு. இவை எல்லாம் உதயநிதி என்ற ஒற்றை மனிதரின் விரலசைவுக்கு கட்டுப்பட்டு பிழைப்பு நடத்துவதை என்னென்பது? இன்றைய தினம் திரைத் துறையில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது எனக்காக! தியேட்டர்கள் கட்டப்பட்டு இருப்பது எனக்காக! என உதயநிதி நம்புகிறார்! இன்றைக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரெட்ஜெயண்டை மீறி வேறொரு நிறுவனத்தால் ரிலீஸ் செய்ய ...
பாஜக தலைமையின் அம்பு தான் கவர்னர். போராட்ட உணர்வும், அஞ்சாமையும் இருந்தால் மட்டுமே பாஜகவின் பாஸிச அரசியலை எதிர் கொள்ள முடியும். இதே பாஜக கவர்னர்கள் மேற்கு வங்கத்திலும், தெலுங்கானாவிலும்,டெல்லியிலும் எப்படி தள்ளாடுகிறார்கள் என ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் ஒரு விஷயத்தை நன்கு மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது! அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்பது சுயேட்சையாக செயல்பட முடியாத ஒரு அமைப்பு! அதன் ஒவ்வொரு நகர்வையும், செயல்பாட்டையும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் தான் தீர்மானிக்கிறார். தற்போதைய ...
இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு ஒரு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்திற்கு இத்தனை தடைகளா? ஏற்கனவே 19 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள கவர்னரின் அடாவடித்தனங்களை கள்ள மெளனத்துடன் சகித்துக் கொள்ளுமா தமிழக அரசு? மிக முக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் 19 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு, தமிழக அரசை தவிப்பிலும், அயர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார்! இந்த மருத்துவ பல்கலை கழகத்துக்கு 10வது துணைவேந்தராக ...
ஸ்டாலின் டெல்லி விசிட் பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் வித்திட்டு கூட்டணிக் கட்சிகளையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சந்தர்ப்பவாதம், சரண்டரின் தொடக்கம், காங்கிரசிடமிருந்து விலகல்.. ஆகிய விமர்சனங்கள் வேகம் எடுத்துள்ளன! நாம் இதை எப்படி புரிந்து கொள்வது? டெல்லியில் ஏற்கனவே தமிழக அரசின் விருந்தினர் மாளிகை உள்ளது. திமுகவிற்கு என்று பாராளுமன்ற வளாகத்திலேயே அலுவலகமும் உள்ளது. இந்த புதிய அலுவலகமானது காங்கிரஸ் காலத்திலேயே ஏழு எம்.பிக்களை பெற்றுள்ள எந்த ஒரு கட்சிக்கும் டெல்லியில் அலுவலகம் கட்டிக் கொள்ள அன்றைய மத்திய அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் தற்போது ...
தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு பாஜகவை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதை போல் திராவிட கழகம் திமுகவை ஸ்டாலின் காலத்திற்கு பின் வழி நடத்தினால் ? பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்சுக்கும் உள்ள உறவு குரு – சிஷ்ய உறவு! இதில் கமிட்மெண்ட் உண்டு! குருவுக்கு பரிபூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குருவை மிஞ்சியவர்களாக சிஷ்யர்கள் தங்களை ஒரு போதும் கருதுவது இல்லை. கொள்கை இவர்களை வழி நடத்துகிறது. நமக்கு இவர்கள் கொள்கையில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்டமைக்கப் பட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. திராவிட இயக்கம் தான் ...
டாஸ்மாக் என்பது அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை மட்டுமல்ல, நூதனக் கொலை! மது என்ற பெயரில் மெல்லக் கொல்லும் விஷச் சரக்கு! பத்து ரூபாய் சரக்கை நூறு ரூபாய்க்கு விற்பது போதாது என்று இன்னும் விலையேற்றுவதா? மதுவின் உற்பத்திக்கும், விற்பனை விலைக்கும் நியாயம் வேண்டாமா? உலகத்திலேயே இரக்கமற்ற முறையில் செய்யப்படும் வியாபாரங்களில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்த்தை தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் விற்னைக்கு தரலாம்! ஒரு பொருளை உற்பத்தி விலைக்கு மேல் எவ்வளவு விற்கலாம் என்பதற்கு ஒரு குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் ...
எஸ்.கண்ணப்பன், சேத்தியாதோப்பு, கடலூர். கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முதல்வர் முன்னிலையில் உள்ளார் என கூட்டணிக் கட்சிகள் புகழ்ந்து தள்ளுகிறார்களே? கூட்டணிக்கு மட்டும் தான் தர்மம் உள்ளதா? உள்ளாட்சியில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு தங்கள் ஊருக்கான தலைவரை தாங்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை பறிப்பது தர்மமா? மேலிடத்து அதிகாரத்தின் மூலம் உள்ளாட்சிகளில் செல்வாக்கில்லாத இடங்களில் தங்கள் கட்சிக்கான தலைமையை வலிந்து திணிக்கும் கூட்டணித் தலைவர்களுக்கு தர்மத்தின் பொருள் தெரியுமா? எளிய கட்சிக்காரனின் உரிமையை பறிப்பது தர்மமா? அ.அறிவழகன், மயிலாடுதுறை நீட் தேர்வால் தான் வெளிநாடுகளுக்கு மாணவர்கள் படிக்க ...
எவ்வளவு பெரிய அவமானம்! கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அவலம், கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமை இவற்றின் விளைவாக, ”குற்றவுணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்…” என ஸ்டாலின் சொன்னது ஒரு நெகிழ்ச்சியைத் தந்தாலும், உள்ளாட்சி தேர்தலை திமுக தலைமை அணுகிய விதத்தில் தொடங்குகிறது எல்லாமே! உள்ளாட்சி அமைப்புகள் அவற்றுக்குரிய பூரண சுதந்திரத்துடன் இயங்க அனுமதிப்பதே ஒரு முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை என்றாலும், அதை நடைமுறைப்படுத்த இன்றைய கட்சித் தலைமைகளின் சர்வாதிகார கண்ணோட்டங்கள் ஒத்துழைப்பதில்லை. ‘அடிமட்டம் ...