அதிமுக அரசு உள்ளாட்சி விவகாரங்களை அணுகியதைப் போலவே, திமுக அரசும் தற்போது அணுகுகிறது. கிராம சபை கூட்டங்கள் ரத்து, உள்ளாட்சி தேர்தலை ஆனவரை தள்ளிப் போடுவது, உள்ளாட்சி அதிகாரங்களை ஊனப்படுத்துவது…என்பது தொடர்கதையா..? முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளான சென்ற ஞாயிற்றுகிழமையில் வடபழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றன. அதில் அமைச்சர்கள், விஐபிக்கள் பங்கேற்றனர். அதே போல முதல்வர் ஸ்டாலினே அறிவாலயத்தில் திமுக நிர்வாகி பூச்சி முருகன் திருமணத்தை திமுக உயர்மட்டத் தலைவர்கள் உடை சூழ நடத்தை வைத்தார். அப்படி இருக்க குடியரசு ...

எம்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம் , சென்னை ஒரே ஆண்டில் 157 கோடி தடுப்பூசி போட்டுவிட்டதாக ஒன்றிய அரசு பீத்திக் கொள்வதை கவனித்தீர்களா…? முதன் முதலாக ரசாயன உரங்களையும், வீரிய விதைகளையும் அறிமுகப்படுத்திய போது, இதே போல ஒரே ஆண்டில் …செய்த சாதனையின் தொடர்ச்சி தான் இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை மலடாக்கிவிட்டது. நாட்டு மக்களை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது. தற்போது நாட்டு மாட்டுக்கு வெளி நாட்டு ஜெர்ஸியோட சினையை ஊசியில செலுத்தி, கம்பீரமான மாடுகளை ஒழித்து பதிலாக கலப்பின மாடுகளை உருவாக்குவது போல நம்முடைய இயற்கையான ...

டாஸ்மாக் பார் ஏல அணுகுமுறையால் ஆளும் கட்சிக்குள் கொந்தளிப்பு! முதல்வர் குடும்பத்து செல்லப் பிள்ளையான செந்தில் பாலாஜி மூலம் ஓட்டு மொத்த டாஸ்மாக் பார்களையும் ஒரு சில கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கிறார்களா? கட்சிக்காரர்களையே காயடிக்கிறார்களா? ஆளும் கட்சித் தலைமை ஒரு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது என்பதற்கு டாஸ்மாக் பார் டெண்டர் விவகார அணுகுமுறையே சாட்சி!. கட்சித் தலைமையின் தலைக்குள் கார்ப்பரேட் முதலாளி வந்து உட்கார்ந்து கொண்டுள்ளதன் அடையாளமாகத் தான் இதை பார்க்க முடிகிறது என்கிறார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்! மது என்ற போதை வஸ்துவின் அடித்தளத்தில் ...

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அராஜகம், கொலை வழக்கு உள்ளிட்ட எதிலும் திமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஒரு சீட்டிங் வழக்கிலே கைது செய்யப் போனார்களாம், தப்பித்துவிட்டாராம்! என்ன நடக்கிறது இந்த ஆட்சியில்? கமிஷன் , கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய  மூன்றையும் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஊழல்களைப் பற்றி சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையே துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது. ஏழை, எளிய பால்விவசாயிகளையும், அடிநிலைத் தொழிலாளிகளையும் சுரண்டித்தான் பல நூறு கோடி சொத்து ...

க. நாகராஜன், அருப்புக் கோட்டை நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை இன்னும் குடியரசுத் தலைவருக்கே அனுப்படவில்லையாமே? செப்டம்பர் 20 ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான அந்த அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பட்டதாக நம்பி நாம் காத்துக் கிடக்கிறோம். அது, இன்னும் தமிழக ராஜ்பவன் டேபிளில் இருந்து கூட நகரவில்லை என்பதும், அதைக் குடியரசு தலைவருக்கு அனுப்ப கோரி முதல்வர் கவர்னரை தற்போது சந்தித்து வேண்டியுள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன! பல கோடி மக்களின் விருப்பம், அவர்களின் வாழ்வை பாதிக்கும் அம்சம்…எப்படி ...

”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினரின் ஊழல்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்போம்” என மேடைக்கு மேடை ஸ்டாலின் பேசினார்! உச்சபட்ச ஊழல்களில் திளைத்த அதிமுக ஆட்சி மீது விரக்தியில் இருந்த தமிழக மக்கள் ‘கண்டிப்பாக இந்த ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்’ என திமுக கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்! ஸ்டாலின் கூறிய வாக்குறுதிகளை நம்பி சமூக ஆர்வலர்களும், அந்தந்தத்துறை சம்பந்தப்பட்ட நேர்மையாளர்களும், அந்தந்த ஏரியாவில் வாழும் மக்கள் சிலரும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகுந்த ஆதாரங்களைத் திரட்டி புகார்கள் தந்தனர்! ...

க.அமுதன், சுசீந்திரம், கன்னியாகுமரி ”அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே.? இதற்கெல்லாம் புளகாங்கிதப்படும் மனநிலையை மக்கள் கடந்துவிட்டனர். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் எப்போது இடிந்துவிழுமோ என்ற நிலையில் சென்ற ஆட்சியாளர்களால் கட்டப்பட்டு உள்ளது. தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துவிழுந்ததை யாவரும்பார்த்தோம். அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றார்கள். என்ன ஆச்சு? அவர்கள் தந்த விசாரணை அறிக்கையே வெளியிடபடாமல் ...

வெளித் தன்மைக்கு திமுகவுடன் பாஜக மோதுவது போல தோன்றினாலும், பாஜகவின் விருப்பங்களை, செயல்திட்டங்களை நிறைவேற்ற திமுக அரசு ஒத்திசைவோடு நடக்கிறது என்ற சந்தேகம் பலப்பட்டு வருகிறது! திசை மாறுகிறதா திமுக? என்ன நடக்கிறது இந்த ஆட்சியில்? இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்து அறநிலையத் துறைக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர்! ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பாஜகவிற்கு போட்டியாக இந்து வாக்கு வங்கி அரசியல் பார்வை திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே பிரதானமாக வெளிப்பட்டது. பிறகு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து திமுக ஆட்சியின் செயல்பாடுகள் ...

குழப்பமோ குழப்பம்! ஜீலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் என முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ளது! அன்றைய தினம் தான் அறிஞர் அண்ணா மதராஸ் என்ற பெயரில் இருந்த மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார்! அதனால், அண்ணா பெயர் சூட்டிய நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாட அரசாணை பிறப்பிக்க போவதாக சொல்லப்பட்டுள்ளது! மொழிவழியாக மாநிலங்கள் உருவாக்குவதற்காக ம.பொ.சிவஞானம், நேசமணி, தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோர் பல போராட்டங்களை நடத்தி, பல மனித உயிர்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர்! தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தே ...

சிபி, பேரளையூர் கடலூர் திமுகவில் அதிக உறுப்பினர்கள் இந்துகள் என்றது ,பதவியேற்ற பின் பார்ப்பனர்களைக் கொண்டு ஹோமம் நடத்தியது,பாரத மாதாவிற்கு பூசை செய்த அமைச்சர்கள் செயல் பற்றியும், RSS மக்கள் சேவை அமைப்பு என்ற மா. சுப்பிரமணியனின் கருத்துப் பற்றியும் எதுவும் பேசாதது, தமிழக பாசக எதற்குப் போராடினாலும் அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவது ,அறநிலையத்துறை கல்லூரியின் பேராசியர் வேலைக்கு இந்துகள் மட்டும் விண்ணப்பிக்க கோரியது போன்ற ஸ்டாலினின் செயல்பாடுகள் பற்றி? திமுகவில் இந்துக்கள் அதிகமாக இருப்பது ஒரு யதார்தமான உண்மை! அந்த உண்மையை சொன்னதே ...