எங்கே பாஜகவின் ஆட்சி நடந்ததோ, அங்கெல்லாம் அவங்க ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்! அதாவது, அதிகாரத்தால், அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வது என்பது பாஜகவின் பார்முலா! பஞ்சாப்பில் பாஜகவை பஞ்சராக்கிவிட்டார்கள் மக்கள்! மற்ற மாநிலங்களில் எப்படி வெற்றியை கொய்தது பாஜக? பஞ்சாபில் பாஜக வசம் ஆட்சி இல்லாதால் அவர்களால் அங்கே வெற்றி பெற முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்த மேற்கு வங்க தேர்தலிலும் இதை நாம் பார்த்தோம். பஞ்சாப்பில் சென்ற சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று வந்த காங்கிரஸ் ...
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் பணிவிதிகளில் திருத்தம் என்பதன் உள்ளடக்கமானது மாநில அரசுகளை, பேரசர்களுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசர்களின் நிலைக்கு தாழ்த்தி வைக்க முன்னெடுக்கும் சதித் திட்டத்தின் ஒரு அம்சமா..? என்ற சந்தேகம் வலுக்கிறது…! சுதந்திர இந்தியாவில் இது வரை எந்த மத்திய ஆட்சியாளர்களும் சிந்தித்து பார்த்திராத ஒரு சித்து விளையாட்டை இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் பாஜக அரசு செய்யத் துணிந்துள்ளது! மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்போது, மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு ...
ஸ்டாலினின் டெல்லி விசிட் உணர்த்தும் உண்மை என்ன..? பிரதமருடனான சந்திப்பால் தமிழ் நாட்டிற்கு பிரயோஜனமுள்ளதா.? என்றால், ஸ்டாலின் தந்துள்ள 25 கோரிக்கைகளில் சரிபாதிக்கு மேற்பட்டவை தற்போதைய ஒன்றிய அரசின் கொள்கைக்கு நேர் எதிரானவை! எதிர்கால கலக அரசியலுக்கான ஒரு கிளியரான மெசேஜ் இந்த கழக ஆட்சி வைத்துள்ள கோரிக்கைகளில் புதைந்துள்ளன..! ”பிரதமர் நம்பிக்கையோடு இருங்கள் என தெரிவித்தார். எதை வேண்டுமானாலும் என்னிடம் நேரடியாகக் கேளுங்கள்’’ என்றார் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்! செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசு தானே ஏற்று நடத்தக் ...
மத்திய – மாநில அரசுக்கிடையிலான அதிகார பகிர்வு, கடைபிடிக்க வேண்டிய உறவுகள்.. ஆகியவை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டம் வந்துள்ளது! ”பரஸ்பர மரியாதையா..? ஆண்டான் – அடிமை உறவா..?” – இரண்டில் ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.! ‘’பேசுவதற்கு வாய்ப்பில்லை’’, ‘’அமைச்சருக்கு அழைப்பில்லை, அவருக்கு கீழ் இருக்கும் அதிகாரிக்கு தான் அழைப்பு’’ ஐந்து நிமிஷம் பேசத் தான் அனுமதி மாநிலஅரசு அதிகாரிகளை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பந்தாடுவேன். என்ற ஆதிக்க மன நிலையில் இனி மத்திய அரசாங்கம் செயல்படுவது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது! ‘’மாநில அரசுகள் ...