அப்பாவிகளை குற்றவாளியாக சித்தரிக்க, சம்பவங்களை ஜோடித்து எழுதும் காவல்துறை ரைட்டர் பணியில் ஒரு மனசாட்சியுள்ள போலீஸ்காரன் எதிர்கொள்ளும் உளவியல் போராட்டங்களை வெகு துல்லியமாக காட்சிப்படுத்திய வகையில், புதிய விவாதங்களை எழுப்புவதோடு, மனசாட்சியை உலுக்குகிறது..! காவல் துறையின் சீரழிவை எழுத்தர் ஒருவரின் பார்வையில் விவரிக்கிறது, நீலம் தயாரிப்பில் இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படம்! படத்தின் திரைக்கதையில் இது நல்ல சினிமா என்பதற்கான  உதாரணங்கள்  நிறையவே வெளிப் படுகின்றன! இதற்கு முன் தமிழில் போலீஸ் கதைகள் என்பவை எப்படிப்பட்டவையாக இருந்தன? ரஜினியின் அலெக்சாண்டர், கமல் ...