போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஏதோ தீடீரென்று அதிரடியாக நடத்தப்படவில்லை. பல நினைவூட்டல்கள்,வேண்டுகோள்கள், சிறு கவன ஈர்ப்பு நடவடிக்கைகள்..மற்றும் கடும் எச்சரிக்கை ஆகியவற்றை கடந்த நிலையில் தான் தவிர்க்க முடியாமல் செய்கிறோம். இதன் காரணமாக பல மாவட்டங்களில் 20 முதல் 25 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன! பஸ்கள் இல்லாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதில் எங்களுக்கும் ஆழ்ந்த வருத்தம் இருக்கிறது, என்றாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. தொழிலாளர்களுக்குரிய 7,000 கோடி ரூபாய் பணத்தை எடுத்து தன்னிச்சையாக செலவு செய்த தமிழக அரசு, ...