சென்னை ஐஐடி, ஒரு உயர் கல்விக்கான நிறுவனம்! ஆனால், அதில் துயர் மரணங்களும், மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், சாதியப் பாகுபாடு குற்றச்சாட்டுகள் போன்றவையும் தொடந்து நடந்த வண்ணம் உள்ளன! ஆனால், அவற்றில் சட்டப்படியான நடவடிக்கைகள் என்பது சாத்தியமில்லாமலே போய்க் கொண்டிருப்பதன் மர்மம் என்ன? 2018 தொடங்கி தற்போது வரையில் சென்னை ஐஐடியில் ஆறேழு மாணவ,மாணவிகள் மரணித்துள்ளனர். கொலையா அல்லது தற்கொலையா என வகைப்படுத்த முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இந்த மாணவர்கள் இறப்பதும், அவை தொடர்பான பல உண்மைகள் வெளி வந்தும் இன்று ...
பிரதமர் மோடி திடீரென்று கல்வியாளர் அவதாரம் எடுத்து மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். அதை இந்தியா முழுமையும் உள்ள மாணவர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம்! ஆனால், மாணவர்களை இயல்பாக கேள்வி கேட்க விடுகிறார்களா? கேட்டால் என்னவாகும்..? பத்திரிக்கையாளர்களை பிரதமர் மோடி கடந்த ஏழு ஆண்டுகளில் ஒருமுறை கூட சந்தித்ததோ, பொதுமக்கள் சார்பான கேள்விகளுக்கு பதிலளித்ததோ இல்லை! அப்படிப்பட்ட பிரதமர் மாணவர்களுடன் ‘பரீக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் (தேர்வு பற்றி ஓர் விவாதம்) 2018 முதல் ஆண்டுதோறும் ஒரு ‘கலந்துரையாடலை’ நிகழ்த்துகிறார். குறிப்பாக ...
‘புர்கா அணிந்த மாணவிகளை இனி கல்வி நிறுவனத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்’ என கர்நாடகாவில் ஒரு புதிய கலகத்தை தூண்டியுள்ளது பாஜக! மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டு இருப்பது இந்திய அளவில் பெரும் விவாதமாகியுள்ளது. இது குறித்து இதுவரை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் என்னென்ன? கர்நாடகாவில் பள்ளியின் 12ஆம் வகுப்புக்கு இணையான பாடமுறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இஸ்லாமிய மாணவிகள், புர்காவை அகற்றிய பிறகு வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாவட்ட உதவி ஆணையர் அந்தஸ்துள்ள அரசு அதிகாரிகள் குழு ஆணையிட்டுள்ளது. ஆனால், மாணவிகள் அதை ஏற்க ...
ஜனவரி 3 ஆம் தேதி முதல் அதிரடியாக பள்ளிக் குழந்தைகளுக்கு (15 -18) தடுப்பூசி படுவேகமாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில் ஐந்து பள்ளிக் குழந்தைகள் இறந்ததாக அவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்துள்ளனர். குழந்தைகளை கொரோனா மிகக் குறைவாகவே தொற்றுகிறது. அப்படியே தொற்றினாலும் மரண பாதிப்பு இல்லை. ஆகவே தேவையில்லை என உலக மருத்துவ நிபுணர்கள் பலர் சொல்லியும் கேளாமல் வலுக்கட்டாயமாக தடுப்பூசி பள்ளிகளில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி போடப்படுகிறது! இது குறித்து மூன்று நாட்கள் முன்பு ...
எதிர்கால சமுதாயமான மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய கலங்கரை விளக்கங்களாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளால் ஆசிரியர் என்று மகத்தான சேவைத் தொழிலில் கறை படிய தொடங்கியுள்ளது. அனைத்து பணிகளிலும் உள்ளது போல ஆசிரியர் சமுதாயத்திலும் ஒருசில கரும்புள்ளிகள் உள்ளன. இப்படிப்பட்டவர்களின் செய்கைக்காக ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறைகூறி மட்டம் தட்டி விட முடியாது. ஆசிரியர் பணியை தவம் போல் செய்கின்ற எண்ணற்ற பல ஆசிரியர்கள் இருக்கும்பொழுது இதுபோல ஒரு சிலரின் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டு விடுகின்றது. ...
சவால்களை சந்திக்கும் தமிழக பள்ளிக் கல்வி – 4 தமிழகத்தின் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக நடந்து வரும் மிக மோசமான பாலியல் சீண்டல் சம்பவங்கள் பல வழிகளில் நம்பிக்கை இழக்கச் செய்கின்றன. கல்வித் துறையின் மீதும் சமூகத்தின் மீதும் சற்றே கூடுதலான கோபம் கூட வருகிறது. உலகம் முழுவதுமே பெண்களுக்கான பாலியல் சீண்டல் பிரச்சனைகள் இருந்து வந்தாலும், சமீப காலமாக தமிழகத்தின் பள்ளிகளுக்குள் நடக்கும் பெண் குழந்தைகளுக்கான அத்துமீறல்களைக் களைய வேண்டியது பெரும் சவாலாக எழுந்துள்ளதை கவனிக்க வேண்டிய தருணம் இது! தனியார் ...
காமராஜர் காலத்து மாணவரணித் தளபதிகளுக்கு தலைமை தாங்கியவர், கம்பீரமான பேச்சாளர், தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால் புலமை கொண்டவர், தீவிர புத்தக வாசிப்பாளர், சிறந்த சோசலிஸ்ட், திராவிட இயக்கத்திலும், இடதுசாரி இயக்கத்திலும் நெருக்கமான நண்பர்களைக் கொண்டவர், நேர்மையான வழக்கறிஞர், எளியோருக்காக பணம் வாங்காமல் ஆஜரானவர்.., பெரும் ஆளுமையாக இருந்தும் உரிய அங்கீகாரம் பெறாதவர்…என பலவாறாக சொல்லிக் கொண்டே போகலாம் நண்பர் தஞ்சை ராமமூர்த்தியைக் குறித்து! தஞ்சை இராமமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி இடியாய் இறங்கி என்னை வந்து தாக்கியது ! தஞ்சை இராமமூர்த்தி மறைந்தார் ! ...
துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவ மாணவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழும், (UAPA), 505 இந்தியன் பீனல் கோட் சட்டப்படியும் போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய ஒரு சட்டத்தை கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இளம் மாணவர்கள் மீது போட்டுள்ளனர். இன்று, நேற்றல்ல, எனக்கு விபரம் தெரிந்தது முதல் நான் கிரிகெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் ...
யாருமே யோசிக்காத வகையில், கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக் கூடம் இல்லாததால் சிறுவர் சிறுமியர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்! சத்துணவு சாப்பிட வழியற்ற நிலை, ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன் இல்லாமை, படிப்பிலிருந்து விலகி சென்று கொண்டிருக்கும் மனநிலை, வேலை இழந்த பெற்றோர்களால் குழந்தை தொழிலார்களானவர்களின் நிலை..என பலவாறாக கள ஆய்வுகள் செய்து அதிர்ச்சிகரமான தகவல்களை தருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்! அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் எந்த நிலையில் உள்ளது? சத்துணவை மட்டுமே உண்டு வந்த பல பிள்ளைகளின் நிலை ...
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரால் ஆன்மீக வேஷம் போட்டு சின்னஞ் சிறுமிகளிடம் பாலியல் வன்மத்தில் ஈடுபட முடிகிறதென்றால், அது அந்த தனிமனிதனிடம் இருக்கும் குறைபாடு மட்டுமல்ல. இந்த சமூகமும் ஒரு குற்றவாளிதான்! கண்மூடித்தனமான பக்தியால் ஒருவரை கடவுளுக்கு நிகராக நம்புவது என்பது நமது கலாச்சாரத்திலேயே தொன்றுதொட்டு திட்டமிட்டு மக்களுக்கு காலாகாலமாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளது! அறுபத்திமூன்று நாயன்மார்களில் சிறுத் தொண்டர் நாயனார் என்பவரின் கதை என்பது என்ன..? பிள்ளைக்கறி வேண்டிய ஒரு நரசாமியாருக்கு அதாவது சிவனடியாருக்கு சிவபக்தர்களான கணவனும், மனைவியும் தங்கள் ஐந்து வயது ...