”இந்துக்கள் என்றால்,இளக்காரமா..? பாதிரியார்கள் நடத்தும் பள்ளியில் குற்றமே நடக்கவில்லையா..?’’ ”பிராமணர்கள் நடத்தும் பள்ளி என்பதால் தாக்கலாமா..? பள்ளியில் சீட்டு கேட்டு கிடைக்காதவர்கள் கிளப்பும் புரளி தான் இது..?’’ ”கொரோனா பிரச்சினையை மறைக்க திமுக இந்த விவகாரத்தை ஒரு கருவியாக்கிக் கொள்கிறது.’’. ”அந்த பள்ளிக் கூடத்தை ஆட்டையப் போட திமுகவினர் முயற்சிக்கிறார்கள்!’’ ‘’முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரும் இதில் இழுக்கப்படுவதால் களங்கம் ஏற்படும் முன்பு இதில் முதல்வர் தலையிட வேண்டும்!’’ ”அந்த வாத்தியார் பற்றி யாரும் இது வரை புகார் ...
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்கள் வாய்ப்பு பெற்று வருவது அளப்பறிய சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி,விவசாய கூலிகள் போன்றோரின் குழந்தைகளுக்கெல்லாம் எம்.பி.பி.எஸ்சீட் கிடைத்தது போன்ற செய்திகளெல்லாம் நம் மனதில் ஏற்படுத்தும் பரவசத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது! ஆயினும், இந்த மகிழ்ச்சிகிடையில் சில யதார்த்தங்களை புறந்தள்ள முடியாது. ஒரு வகையில் இந்த 7.5% ஒதுக்கீடு என்பது நமக்கு பெருமை தரக்கூடியதல்ல,சிறுமையே! இதை தான் இந்த கட்டுரையில் கூறவுள்ளேன். அரசு பள்ளிகளின் அவல நிலைக்கு குறிப்பாக அவசியமான பல சப்ஜெக்ட்களுக்கு கூட ஆசிரியர்கள் ...













