தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள் : 6 தமிழக அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்கள் பற்றாகுறை நிலவுகிறது. இன்னும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளா..? ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு ஆர்வமில்லையா? இது காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் சூழ்ச்சியா..? அரசு ஆரம்ப பள்ளிகளில் 1997 ஆம் ஆண்டு வரை இருபது மாணவர்க்கு ஒரு ஆசிரியர் என்ற அரசாணையே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், 1997 முதல்  1 : 40 என்று மாறியது.  மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டன. கல்வி உரிமைச் சட்டம் ...