யாருமே யோசிக்காத வகையில், கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிக் கூடம் இல்லாததால் சிறுவர் சிறுமியர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்! சத்துணவு சாப்பிட வழியற்ற நிலை, ஆன்லைன் வகுப்பிற்கான செல்போன் இல்லாமை, படிப்பிலிருந்து விலகி சென்று கொண்டிருக்கும் மனநிலை, வேலை இழந்த பெற்றோர்களால் குழந்தை தொழிலார்களானவர்களின் நிலை..என பலவாறாக கள ஆய்வுகள் செய்து அதிர்ச்சிகரமான தகவல்களை தருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்! அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறன் எந்த நிலையில் உள்ளது? சத்துணவை மட்டுமே உண்டு வந்த பல பிள்ளைகளின் நிலை ...