அன்பு நண்பர்களே, அறம் இணைய இதழ் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்! கொரோனா காலகட்டம், அந்த காலகட்டத்தில் சமூகம் சந்தித்த நெருக்கடிகள்,பொருளாதாரச் சவால்கள் தொடங்கி அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டிய அரசியல் போக்குகள், சென்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியது போலவே இந்த ஆட்சியாளர்களின் நல்லவை, கெட்டவைகளையும் பாரபட்சமின்றி விமர்சித்து வருகிறோம்.மத்திய பாஜக ஆட்சியின் நிர்வாக போக்குகளையும், சர்வதேசிய விவகாரங்களையும் உடனுக்குடன் ஆய்வு செய்து தந்து கொண்டுள்ளோம். ...