இந்தியா பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தை விடவும் தற்போது தான் நம் நாட்டில் அன்னியப் பொருட்களின் ஆதிக்கமும்,அன்னியக் கலாச்சாரத்தின் தாக்கமும் அதிகமாக இருக்கின்றன. அன்று நம் மீது வலிந்து திணிக்கப்பட்ட அன்னியப் பொருட்களை மறுத்தும்,எரித்தும் நம் முன்னோர்கள் போராட்டம் நடத்தினார்கள்.ஆனால், இன்றோ, நாமே நம் மீது அன்னியக் கலாச்சாரத்தையும்,அன்னியப் பொருட்களையும் திணித்துக் கொள்கிறோம்! குறிப்பாக சிறுதொழில்களையும்,சிறு வியாபாரிகளையும் அழிக்கும் அன்னிய பொருட்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளன. நமது வீட்டு சமையலறையில் உள்ள பிரிட்ஜ்,வாசிங் மெசின் தொடங்கி ஹாலில் மாட்டியுள்ள கடிகாரம்,உட்காரும் சோபா, பெட்ரூமில் ...