அன்பு நண்பர்களே, அறம் இணைய இதழ் தொடங்கி அடுத்த மாதத்தில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்! சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும் நிகழ்பனவற்றை உள்ளதை உள்ளபடி உண்மைத் தேடலுடன் பகிர்ந்து வருகிறோம்! உண்மை தான் முக்கியம் , அதில் சமரசமோ, சார்புத் தன்மையோ தலையிட அனுமதிப்பதில்லை. இன்றைய பெரு நிறுவனங்களின் ஊடகங்கள் அதிகார மையங்களை சார்ந்து இயங்குவதால் தொடர்ந்து பற்பல மாயைகளை கட்டமைத்து உண்மைகளை உணரவிடாமல் மக்களை குழப்பி ...
வாசகர் ஆதரவால் மட்டுமே செயல்படக் கூடிய ஒரு இணைய இதழாக அறம் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது! உண்மைக்கான தேடல் கொண்ட வாசகர் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில் நமது சமரசமற்ற விமர்சனங்களால் தவிர்க்கவியலாமல் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகப்பட்டுவிடுகிறது, நாம் விரும்பாமலே! எனினும் அச்சம் காரணமாகவோ, தயவு காரணமாகவோ சமூக தளத்தில் உண்மை ஊமையாகிவிடும் நேரத்தில் யதார்தங்களை பேசாமல் நம்மால் அமைதி காக்க முடியவில்லை. அறம் தன் சமரசமற்ற விமர்சனங்களால் அரசியல், சமூக தளங்களில் தொடர்ந்து அதிர்வுகளை உருவாக்கி வருகிறது என்றாலும், பொருளாதார ...
அன்பு நண்பர்களே, அறம் இணைய இதழ் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழக இதழ்களில் தனக்கென ஒரு தனித்துவத்துடன் அறம் வந்து கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்! கொரோனா காலகட்டம், அந்த காலகட்டத்தில் சமூகம் சந்தித்த நெருக்கடிகள்,பொருளாதாரச் சவால்கள் தொடங்கி அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலை ஒட்டிய அரசியல் போக்குகள், சென்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியது போலவே இந்த ஆட்சியாளர்களின் நல்லவை, கெட்டவைகளையும் பாரபட்சமின்றி விமர்சித்து வருகிறோம்.மத்திய பாஜக ஆட்சியின் நிர்வாக போக்குகளையும், சர்வதேசிய விவகாரங்களையும் உடனுக்குடன் ஆய்வு செய்து தந்து கொண்டுள்ளோம். ...
அறத்திற்கு நாளுக்கு நாள் கூடுதல் வாசகர்கள் வந்து கொண்டே உள்ளனர்! விளம்பரமோ, வியாபார உக்தியோ இல்லாமல் வாசகர்கள் வாயிலாக அறம் தானாகத் தன்னை விரிவுபடுத்திக் கொள்கிறது. ஆக, அறம் சார்ந்த பார்வை பலரையும் ஈர்க்கிறது என நம்பிக்கை கொள்கிறேன்! பொழுது போக்கவோ, நேரத்தை விரயமாக்கவோ நினைக்கும் வாசகர்கள் அறம் வாசிப்பதில்லை. சமூக அக்கறையும், மானுட நேயமும் தான் நம்மை பிணைத்துள்ளன! சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கேள்வி – பதில் பகுதி மிகுந்த வரவேற்பை பெற்று வருவது நான் எதிர்பார்க்காததாகும். உண்மையில் மிகுந்த தயக்கத்தின் பிறகே இந்தப் ...
மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப அறம் பேசும் உண்மைகள் சமூக, அரசியல் தளத்தில் அதிர்வுகளை தொடர்ந்து உருவாக்கி வருகின்றன! எழுதப்படும் வார்த்தைகளில் வாய்மை இருந்தால், அதற்கொரு வலு இயல்பாகவே ஏற்பட்டுவிடும்! அறச் சிந்தனையின் பாற்பட்ட வாசகர்களே இதழின் பலமாகும்! சமகால நிகழ்வுகள் குறித்த சமரசமற்ற விமர்சனங்கள்! சார்பு நிலையின்றி யதார்த்தங்களை உள்வாங்கி உண்மைகளை வெளிச்சப்படுத்தும் கட்டுரைகள்! உள்ளுர் நிகழ்வுகள் தொடங்கி, உலக அரங்கில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் வரை அலசி, ஆய்வு செய்து சாரத்தை பிழிந்து எளிமைப்படுத்தி தரும் கட்டுரைகள்! இப்படியாக 11 ...
சிறு தீப்பொறியாலும் பெருங்காட்டை அழிக்க முடியும் என்பதற்கேற்ப சிற்றிதழ் என்றாலும், அறச் சீற்றத்தின் வீச்சு காரணமாக அறம் இணைய இதழின் வெளிப்பாடுகள் பரந்துபட்ட மக்களிடமும், கருத்து சென்று சேர வேண்டிய உரிய தளங்களிலும் சென்று சேர்ந்த வண்ணம் தான் உள்ளது! தேர்தல் காலங்களில் நாம் எழுதிய கட்டுரைகள் பிரபல பத்திரிகைகளிலும்,சிறு பத்திரிகைகளிலும் எடுத்து பிரசுரம் செய்யப்பட்டன. வாட்ஸ் அப்களில் பெரிய அளவு வலம் வந்ததன. மொத்தத்தில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின. அறம் தன் வாசகர்களோடு இணைந்து அதன் சமூகக் கடமையை சிறப்பாக செய்தது! ...