ஐந்தாவது மாதத்திலேயே பரவலாக அறியப்பட்ட இணைய இதழாக அறம் தெரியவந்திருக்கிறது என்பது நேர்மையான இதழியலுக்கு கிடைத்த வெற்றியாகத் தான் பார்க்கிறேன்! எந்தப் பெரிய நிறுவனப் பின்புலமின்றி, பொருளாதார பலமுமின்றி, கடும் உழைப்புடன் கூடிய சமூக அக்கறையையையும், அனுபவத்தையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே அறம்! ”நல்லோர் சிலர் உள்ளோரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’’ என்பதற்கிணங்க வெகு சில வாசகர்கள் அனுப்பும் சந்தாவைக் கொண்டு அனைவரும் கட்டணமின்றி படிக்கும் வகையில் அறம் தொடர்ந்து வருகின்றது. அறம் சமூகத்தின் அவசியம் என நினைக்கும் வாசகர்களால் ...