அறம் வாசக நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் வணக்கம்! அறம் நான்காம் மாதத்தில் அடியெடுத்து வைத்து பயணிக்க தொடங்கிவிட்டது! நாள்தோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன! படிக்கும் வாசகர்களால் மேன்மேலும் பகிரப்படுவதன் வாயிலாகவே இந்த வாசகர்தளம் வளர்ந்து கொண்டுள்ளது! வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற, உண்மையான இதழியலுக்கான அடையாளமாக அறம் வந்து கொண்டுள்ளது. ஆணவமிக்க அதிகாரமையத்திற்கு எதிரான அறச் சீற்றங்கள் சமரசமற்ற விமர்சனங்கள்! எல்லா கட்டுரைகளிலும் வெளிப்படும்,குழப்பமற்ற தெளிவான பார்வை! பாசாங்கில்லாமல் நேர்பட எழுதும் எளிமை! இவையே அறத்தின் இயல்பாக வெளிப்பட்டு வருவதை நீங்கள் உணரலாம்! ‘ஊருக்கு உழைத்திடல் ...