ஒரு தனி நபரோ,சமூகமோ அது எந்த அளவுக்கு நாகரீகமடைந்துள்ளது, பண்பாட்டு ரீதியாக பண்பட்டுள்ளது என்பதற்கான அளவுகோல் பெண்கள் குறித்த பார்வை தான்! பெண்களை சமத்துவத்துடன் நடத்த முடியாத தனி நபரோ,சமூகமோ மேம்பட்ட அடையாளத்தை பெற முடியாது. பாஜக அரசு எவ்வளவு பத்தாம் பசிலித்தனமான அரசு என்பதற்கு இதைவிடப் பெரிய சான்று வேண்டாம்! தேசியப் பாதுகாப்பு அகாடமி  இந்திய இராணுவத்தின் முப்படைக்கான பயிற்சி வழங்கும் நிறுவனமாகும். 1954-இல் துவக்கப்பட்ட இந்த இராணுவப் பயிற்சி அகாடமி, மகாராட்டிரா மாநிலத்தின் புனேயில் செயல்படுகிறது. தேசியப் பாதுகாப்பு அகாடமியின் தரைப்படைப் ...