31 ஆண்டு சிறைவாசம்! 20 ஆண்டுகளாக காத்திருப்பில் வைக்கப்பட்ட கருணை மனுக்கள்! முடிவெடுக்காமல் மத்திய அரசுகள் காட்டிய மாபெரும் மெத்தனம்! ஆட்சியாளர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தெளிவான ‘பொலிடிக்கல் வில் பவர்’ இல்லாமை ஆகியவற்றின் விளைவே நீதிமன்ற தீர்ப்பு! சரியான நேரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக முடிவெடுத்துள்ளது. இன்றைக்கு உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் அன்றே இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வி.ஆர்.கிருஷணய்யர் போன்றோரும், சதாசிவம் போன்றோரும் வெளிப்படுத்திய ஆதரவான கருத்துக்களே அடித்தள காரணமாகும் என்பதை நாம் நினைவு ...
‘எதற்காக இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்..?’ என ராஜேந்திர பாலாஜி கைது தொடர்பாக தமிழக அரசை கேள்வி கேட்கிறது உச்ச நீதிமன்றம்! ஆனால், பல வழக்குகள் நிலுவையில் இருக்க, இவ்வளவு அவசரமாக ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே எடுத்துக் கொண்டது ஏன்…? மோசடி குற்றங்கள் செய்து ஓடி ஒளிந்த ராஜேந்திர பாலாஜிக்காக இவ்வளவு பொங்க வேண்டிய அவசியம் என்ன..? ஊருக்கென்றே உழைத்த உத்தமரை தமிழக காவல்துறை கைது செய்துவிட்டது போலும்! ”நீதிமன்றத்தை ஏன் தர்ம சங்கடப் படுத்துகிறிர்கள்..” என ...
ஓட்டுமொத்த நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் கடந்துவிட்டது! உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை உலுக்கி எடுத்துள்ளது! ஆனால், இன்று வரை இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயலைக் கண்டிக்கவோ, வருத்தப்படவோ பிரதமர் மோடியும்,,உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்வரவில்லை! எனில், நடந்த சம்பவங்களுக்கு இவர்களின் ஒப்புதல் இருந்தது என்று நாம் புரிந்து கொள்ளலாமா? உலகில் நடக்கும் பல சம்பவங்களுக்கு டிவிட் போடுபவர் மோடி! தமிழ்நாட்டில் திண்டுக்கல் லியோனி பேசிய ஒரு பேச்சுக்கு டெல்லியில் இருந்து வந்து கண்டனம் தெரிவித்தவர். இந்தப் படுகொலைகளை ...
அடக்குமுறைச் சட்டங்கள், மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள்..! இது தான் இன்றைய பாஜக அரசு! மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பயங்கவாத முத்திரை! தேச விரோத குற்றச்சாட்டுகள்..! சமீபகாலமாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி, மனித நேயத்தை காட்டி வருவதற்கு இந்த தீர்ப்பையும் உதாரணமாக சொல்லலாம்..! நடாஷா நார்வல், தேவாங்கனா கலிதா,அசீப் இக்பால் தன்ஹா என்ற மூன்று மாணவ மணிகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகளான ...