அப்பாடா..! ஒரு வழியாக பிரதமர் வழிக்கு வந்தார்! லட்சக்கணக்கில் உயிரிழப்புகள், ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள், தனியார் மருந்து நிறுவனங்களும் மருத்துவமனைகளும் நடத்திக் கொண்டிருக்கும் பகல் கொள்ளைகள்..என எதை பற்றியும் கவலைபடாமல் இரண்டு தனியார் தடுப்பூசி நிறுவனங்களின் லாபத்தை பெருக்குவதிலேயே கண்ணும், கருத்துமாக இயங்கிய மத்திய பாஜக அரசை உச்ச நீதிமன்றம் உலுக்கி எடுத்ததில் வழிக்கு வந்தது பாஜக அரசு! இந்தியாவில் சுதந்திரத்திற்குப்பின் இலவச தடுப்பூசிகள் அம்மை, காலரா போன்ற நோய்களுக்குப் போடப்பட்டு வந்தன, என்றாலும் 1978ல் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாகப் ...
அதிகார பலத்தால் எல்லாம் வல்லவர்களாக தோற்றம் காட்டலாம்! ஆனால், விமர்சனங்களை தாங்க முடியாத கோழைகளே பாஜக ஆட்சியாளர்கள்..! என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பே சாட்சியாகிறது! ‘’விமர்சிக்கிறாயா..? எப்.ஐ.ஆர், தேசத் துரோக வழக்கு, கோர்ட், ஜெயில்..’’ அப்படின்னு இனி பயப்பட வைக்க முடியாது…! ஜனநாயகத்தை காப்பாற்ற நீதிமன்றம் துணையிருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது! மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா வட இந்தியாவில் பிரபலமானவர்! தூர்தர்ஷன் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தொலைக்காட்சி ஊடகங்களில் இயங்கி வருபவர்! இவர் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் ஒரு ...
தனக்கு முடிவெடுக்க அதிகாரமற்ற ஒரு விவகாரத்தில் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு வருஷக்கணக்கில் கமுக்கமாக இருந்த கவர்னரின் பெருந்தன்மையை என்னென்பது? அவருக்கு அதிகாரம் இருக்கிறதா எனத் தெளிவு பெறாமலே அவரிடம் ஒரு மனுவைத் தந்து வருடக்கணக்கில் காவடிதூக்கி, கை கூப்பிய ஆட்சியாளர்களின் ஆண்மையை என்னென்பது? முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத கவர்னர் மூன்று நாட்களில் முடிவெடுப்பார் என நீதிமன்றத்திற்கு உத்திரவாதம் வழங்கிய மத்திய அரசின் சொலிடர் ஜெனரலின் சட்ட அறிவை என்னென்பது? முடிவெடுக்க அதிகாரமில்லாத கவர்னருக்கு ஒரு வாரக் கெடு கொடுத்து, ”ஐயா உடனடியாக முடிவெடுத்து ...
உறுதிமிக்க விவசாயிகள் போராட்டத்தை கண்டு அரண்டு போயுள்ள அரசு, உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன் விவசாயிகள் போராட்டத்தை நசுக்க திட்டமிடுகிறது. அதன் விளைவே நான்கு பேர் கமிட்டி. இந்த நான்கு பேர் வேறு யாருமல்ல, இந்த சட்டங்கள் உருவாக்கத்தின் பின்னணியில் செயல்பட்டவகளே..! கொலைகாரர்கள் கையில் அதிகாரபூர்வமாக கத்தியை தந்ததைப் போல விவசாயிகள் அழிவுக்காக திட்டமிட்டவர்களிடமே தீர்வையும் கேட்டுப் பெறுகிறது உச்ச நீதிமன்றம்! எட்டாவது சுற்று பேச்சு வார்த்தை அரசுக்கும் விவசாயிகளுக்குமிடையே தோல்வி அடைந்த நிலையில் அடுத்த சுற்று பேச்சு வார்த்தை ஜனவரி 15 என்று அரசு ...
தப்லீக் ஜமாத் சம்பந்தபட்ட செய்திகளில் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு மத்திய அரசு துணைபோன விபரீதம் உச்ச நீதிமன்றத்தின் உலுக்கி எடுத்த விசாரணையின் மூலம் நன்றாக அம்பலப்பட்டுள்ளது! உலகையே முடக்கிப் போட்ட கோவிட் 19 கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் அறியப்பட்ட முதல் காலகட்டத்தில், கொரோனாவை இந்தியாவுக்குள் கொண்டு வந்து பரப்பியதான தோற்றத்தை உருவாக்கி, முழுப் பழியையும் தப்லீக் ஜமாஅத் அமைப்பின் மீது சுமத்தி, பல பிரபல ஊடகங்கள் எழுதின. கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் ஆன்மீக மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் சிலர் ...
இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் புதிதல்ல, எத்தனையோ முறை ஆட்சியாளர்கள் விமர்சனங்களை தாங்க முடியாமல் பத்திரிகையாளர்களை கைது செய்துள்ளனர். ஆனால்,அர்னாப் கைதான போது தான் பத்திரிகை சுதந்திரம் குறித்த அக்கரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொத்துக் கொண்டு வருகிறது! அடடா என்னாமா துடிச்சு போயிட்டாங்க. அர்னாபிற்கு நீதிமன்றம் வெறும் 14 நாட்கள் தான் சிறை என தீர்ப்பளித்தது. அதுவும் ஜாமீன் வேண்டுமென்றால், கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றது. ஆனால், அர்னாப் சாதரணமானவரா? ’’விட்டேனா பார்’’ என உச்ச நீதிமன்றத்திற்கே சென்று விட்டார். உச்ச ...