நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள – உலகெங்கிலும் பேசப்பட்டுவருகிற – வேவு பார்க்கும் விவகாரத்தில் – ( பெகாஸ்ஸ்-ஸ்பைவேர்) யார் யாரெல்லாம் வேவு பார்க்கப்பட்டு உள்ளார்கள் என்று நாளுக்கு நாள் வரும் செய்திகள் நம்மை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றன! எதனால் இவர்கள் வேவு பார்க்கப்பட்டார்கள் என்று ஆழமாக பார்க்கையில், அவர்களின் நேர்மையே இந்த அரசாங்கத்தை அச்சுறுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது! தனிமனித சுதந்திரம், உரிமை,அந்தரங்கம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிக்கிற செயலன்றி இவை வேறொன்றுமில்லை. ஒரு நாகரீக சமுதாயத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று வைத்திருக்கும் ...