ஒய்வறியா உழைப்பு, நேர்மையான அரசியல்,வெளிப்படைத் தன்மை ஆகிய குணாம்சங்களைக் கொண்டவர் கே.பாலகிருஷ்ணன்! யோகேந்திர யாதவ் தலைவராக இருக்கும் ’ஸ்வராஜ் இந்தியா’ (சுயஆட்சி இந்தியா) கட்சியின் தமிழக தலைவராக இருக்கிறார் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தமிழகத் தலைவராகவும் உள்ளார்.அவரது நேர்காணல்! ’ஸ்வராஜ் இந்தியா’ கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தானே? ஆமாம், அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியபோது அதில் நான் ஆர்வமாக கலந்து கொண்டேன். கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகிய மூவரும் சேர்ந்து அதன் ...