ஏதோ மன்னராட்சி போல மக்களுக்கு பொங்கல் பரிசாம்! தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய கையோடு, இப்படி ஒரு அறிவிப்பு; அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துவிட்டு, ”பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்! இது அரசாங்க செலவில் செய்யப்படும் ஓட்டுபொறுக்கி அரசியல்! அதுவும் அரசாங்க ஊழியர்களைக் கொண்டு, கட்சிக்கு ஆதாயம் சேர்க்கும் விதமாக ...