துக்ளக் ஆண்டு விழாவில் ஆணவத்தோடு பேசிய குருமூர்த்திக்கு அரசியல்வாதிகளான தினகரன்,ஜெயகுமார் மட்டுமல்லாது, ஆன்மீகவாதியான ரங்கராஜன் நரசிம்மனும் எதிர்தாக்குதல் தொடுத்துள்ளார்! விழாவில் வரதராஜன் என்ற வாசகர் அற நிலையத்துறை தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் கூறிய குருமூர்த்தி, ”ஏதோ அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து கோயில்களின் சொத்துக்களை கொள்ளையடித்து வருகிறார்கள்’.தமிழகத்தில் அரசாங்கமும்,இந்து மதமும் இணைந்துவிட்டன! இந்துமதம் அரசாங்கத்திற்குள் சிக்கி கொண்டுவிட்டது’’ என்று முட்டாள்தனமாக பதில் சொல்லி இருக்கிறார்! ஆனால் உண்மையில் அப்படி கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பவர்களுக்கு துணை போனவர் மட்டுமல்ல, பாதுகாப்பு தந்தவரே குருமூர்த்தி தான் என்பதாக ...