காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அதிர வைக்கும் சம்பவங்களே கதை! காவல்துறையின் மூர்க்கத்தனத்தின் பின்னணி, அதிகாரிகளின் ஈகோ, ஆதிக்க உணர்வும், அடிமை உணர்வும் கட்டமைக்கப்படும் நுணுக்கம் ஆகியவற்றை துல்லியமாக படம் பிடித்த வகையில் இது வரை சொல்லப்படாத கதைக் களமாகும்! ‘டாணா’ என்றால் காவல்நிலையம் என்று பொருள் . டாணாக்காரன் என்பதை காவல்காரன் என்று சொல்லலாம். விக்ரம் பிரபு காவலர் பயிற்சிக் பள்ளியில் சேர்வதில் கதை தொடங்குகிறது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் பணிபுரிந்த தமிழ் இப்படத்தில் இயக்குநராக ...