ஒரு பத்திரிகையாளன் பார்வையில் வரலாற்றை உள்வாங்கி, கடந்த கால வரலாற்றை சமகால அரசியலோடு தொடர்புபடுத்தும் கண்ணிகளைக் கண்டறிந்து வரலாற்று புதினங்களை படைப்பதில் வல்லவர் தமிழ்மகன்! மறைக்கட்ட வரலாறுகளை, திரிக்கப்பட்ட வரலாறுகளின் உண்மைத் தன்மையை நாவல் வழியே சொல்வதன் மூலம் ஒரு மிகச் சிறப்பான வரலாற்று பங்களிப்பை செய்து வருகிறார்! பொதுவாக வரலாற்று நாவல் என்றால் சேர,சோழ,பாண்டியன் கதைகளைத்தான் நாம் படித்து இருப்போம். அதில் சண்டை இருக்கும்; காதல் இருக்கும்; வருணனை இருக்கும். ஆனால் வரலாற்றில் மறைக்கப்பட்ட , போரை விரும்பாத மன்னனின் கதையை இந்த நாவல் ...