பெரும்பாலான பெரிய அணை திட்டங்கள் மக்களுக்கு உதவுவதை விட ஒப்பந்ததாரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நிதி உதவி செய்யும் சர்வதேச நிறுவனங்களுக்கும் தான் பயன்படுகின்றன! மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவின் மூர்க்கமான முஸ்தீபுகளை வெறும் பெயரளவுக்கு எதிர்த்துவிட்டு பம்முகிறது தமிழக அரசு! பெரும் அணைக்கட்டுத் திட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடையும் ஆதாயங்களை, மறைக்கப்பட்டு வரும் அந்த உண்மையை ஏற்கனவே மேத்தாபட்கர் துல்லியமாக அம்பலப்படுத்தி உள்ளார்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள பாஜக, காங்கிரஸ், மஜத போன்ற கட்சிகள் இந்த திட்டத்தின் மதிப்பான 9,000 கோடியில் கணிசமாக ...

அறிவார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்க கல்விக்கும், நூலக வாசிப்புக்கும் அதிக நிதி ஒதுக்கீடு, சுற்றுச் சூழலில் கவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என்பதோடு – கொள்கை சார்ந்த பார்வைகளை அச்சமின்றி வெளிப்படுத்தியதது சிறப்பு! அதே சமயம், வாங்கி குவிக்கும் கடன்கள் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும்! பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்! இது ஒரு வகையில் யானைப்பசிக்கு சோளப் பொறி போன்றதாகும். ஏனெனில், பள்ளிக் கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப இந்த தொகை ...

உள்ளாட்சி தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, வெறும் சதவிகித கணக்குகளைச் சொல்லி அதை இன்னும் அலட்சியப்படுத்த முடியாது என்ற பேச்சுகள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. உள்ளபடியே தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து என்னவென்று பார்ப்போம். உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றியை விரிவாக பார்ப்போம் 21 மாநகராட்சிகளில் மொத்தமாகவுள்ள 1,374 இடங்களில் பாஜக 22 வார்டுகளை வென்றுள்ளது. 138 நகராட்சிகளில் மொத்தமுள்ள 3,843 இடங்களில் பாஜக 56 இடங்களை வென்றுள்ளது. 490 பேரூராட்சிகளின் மொத்தமுள்ள 7,621 இடங்களில் 230 இடங்களை வென்றுள்ளது. ஆக சதவிகித ...

சமீபத்தில் ஒரே வாரத்தில் சென்னையை ஒட்டி மூன்று இளைஞர்கள் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்பொழுது இறந்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த மரணங்களை நம்மால் ஏன் தடுக்க முடியவில்லை…? ஜனவரி 15-ல் கதிரவன் ஈஞ்சம்பாக்கத்தில் இறந்துள்ளார். ஜனவரி 19-ல் ராஜேஷ், ஏழுமலை இருவரும் தாம்பரம் வரதராஜபுரத்தில் இறந்துள்ளனர். இந்த மூவருக்கும் 4 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 30 சுத்திகரிப்பு தொழிலாளிகள் இதுபோல் இறந்துள்ளனர்.  ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கும்பொழுது இறந்து உள்ளனர் ...

நாடறிந்த மக்கள் உரிமைப் போராளி மேதா பட்கர். ” நர்மதா பச்சாவோ அந்தோலன்” அமைப்பின் செயல்பாடு வாயிலாக உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்களின் கவனம் பெற்றவர்! நர்மதா நதியில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளால் பாதிக்கப்பட்ட  பழங்குடி மக்கள், ஏழை, எளியவர்களுக்காக போராடி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப் பட  முக்கியக் காரணமாக இருந்தவர். இவர் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும்,நாட்டின் எந்த மூலையில் ஒடுக்கப்பட்ட,ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுக்கத் தயங்காதவர். இதற்காக அவர் நிறுவிய அமைப்பு “மக்கள் ...

குழப்பமோ குழப்பம்! ஜீலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் என முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ளது! அன்றைய தினம் தான் அறிஞர் அண்ணா மதராஸ் என்ற பெயரில் இருந்த மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார்! அதனால், அண்ணா பெயர் சூட்டிய நாளையே தமிழ்நாடு நாளாக கொண்டாட அரசாணை பிறப்பிக்க போவதாக சொல்லப்பட்டுள்ளது! மொழிவழியாக மாநிலங்கள் உருவாக்குவதற்காக ம.பொ.சிவஞானம், நேசமணி, தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோர் பல போராட்டங்களை நடத்தி, பல மனித உயிர்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர்! தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தே ...

இந்தியாவிலேயே நகரமயமாதல் மிக அதிகமாக நடப்பது தமிழகத்தில் தான்! விவசாய நிலங்களெல்லாம் வேக,வேகமாக விழுங்கப்பட்டு புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே உள்ளன! இதன் உள்ளார்ந்த நோக்கம் வளர்ச்சியா..? இதன் பின்னணி என்ன..? விளைவுகள் என்ன..? ”எங்க ஊரும் மாநகராட்சி ஆகிவிட்டது” என்பது மக்களில் சிலருக்கு மகிழ்வைத் தரலாம்! ஆகா, இனி பெரிய சாலை வசதிகள் செய்து தரப்படும், போக்குவரத்து வசதிகள் மேம்படும்! பெரிய,பெரிய ஷாப்பிங் மால், தியேட்டர்கள் தோன்றும், தொழிற்சாலைகள் வந்து வேலை வாய்ப்புகள் அதிகமாகும்..! என்றெல்லாம் யோசிக்க தோன்றும். இது மட்டுமல்ல, ...