இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தில் கொரானா பொருளாதார நெருக்கடியில் நாடும், மக்களும் இருப்பதை உத்தேசித்து தங்கள் ஊதியத்தை 30% குறைத்துக் கொள்ளும் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது! இன்றைய சட்டமன்றத்தில் நடந்தது என்ன? பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? மற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு..? ஆகியவை குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை! தமிழக சட்டசபைக் கூட்டம் இன்றைய தினம் கலைவாணர் அரங்கத்தில் விஷேச ஏற்பாடுகளுடன் சிறப்பான வகையில் கூடியது! ஆனால், இன்று கூடிய தமிழகச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களின் ஊதியக்குறைப்பு தொடர்பான எந்த முன்னெடுப்போ,விவாதமோ கூட எழவில்லை! ...