மலேசிய இந்தியர்களில் 85% தமிழர்களாக உள்ளனர். ஆனால், இந்திய அரசு இங்கு ஏனோ அதிகாரிகளாக தமிழர்களை நியமிப்பதில்லை.தூதரகத்தை நாடும் தமிழர்களை வட இந்திய அதிகாரிகள் அலைக்கழித்தல், அவமானப்படுத்தல் தொடர்கிறது! மேலும், இவர்கள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சித்தாந்தத்தை மலேசியா தமிழர்களிடம் திணிக்க துடிக்கிறார்கள்! மலேசிய இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராக இருந்தும் இந்தி மொழிக்காரர்களையும் மற்றவர்களையுமே இங்கு தூதராக அனுப்புவது இந்திய ஒன்றிய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. அத்துடன், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் தூதரக சேவையை நாடும்பொழுதெல்லாம் ...

புலம் பெயர் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக இன்று புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என்பதாகவெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கும் வாரியம் தோற்றுவிக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் புலம் பெயர் தமிழர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன! அவற்றை கீழே தந்துள்ளோம். அதே சமயம் விடுபட்ட முக்கியமான ஒரு சிலவற்றை கவனப்படுத்துவதே கட்டுரையின் நோக்கமாகும்! தேர்தலுக்கு முன்பே ஸ்டாலின் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான கட்சி அமைப்பாளர்களை அறிவித்து இருந்தது கவனத்திற்குரியது! வெற்றி பெற்று வந்ததில் இருந்து தமிழக ...

பத்தடிக்கு பத்தடி கொண்ட தகரக் கொட்டகை! வறுமையின் உச்சம்..! அடிப்படை வசதிகளற்ற அவலங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத கடுமையான கட்டுபாடுகள்..! மொத்ததில் ஒரு திறந்த வெளி சிறைச்சாலை போலத் தான் இருக்கிறது தமிழ் நாட்டில் 35 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை தமிழர்களின் நிலைமை..! ” இலங்கை தமிழர் அகதிகள் முகாமிற்கு நான் சென்று வரும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தாமல் வீடு திரும்பியதில்லை. அந்த அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. வெயில் காலத்தில் வீட்டிற்குள் இருக்க முடியாது .வெளியில் வந்து  மரத்தின்  கீழ்தான் ...