டாஸ்மாக் என்பது அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை மட்டுமல்ல, நூதனக் கொலை! மது என்ற பெயரில் மெல்லக் கொல்லும் விஷச் சரக்கு! பத்து ரூபாய் சரக்கை நூறு ரூபாய்க்கு விற்பது போதாது என்று இன்னும் விலையேற்றுவதா? மதுவின் உற்பத்திக்கும், விற்பனை விலைக்கும் நியாயம் வேண்டாமா? உலகத்திலேயே இரக்கமற்ற முறையில் செய்யப்படும் வியாபாரங்களில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்த்தை தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் விற்னைக்கு தரலாம்! ஒரு பொருளை உற்பத்தி விலைக்கு மேல் எவ்வளவு விற்கலாம் என்பதற்கு ஒரு குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் ...

நீதிமன்றமே கண்டித்துள்ளது. சட்டவிரோதமாக டாஸ்மாக் பார்களை 18 ஆண்டுகளாக தமிழக அரசே நடத்தி வந்துள்ளதாம்! அதனால், அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதங்களுக்குள் மூடவேண்டுமாம்!, சமீபத்திய பார் டெண்டர்களும் ரத்தாகிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? தமிழ்நாட்டில் மது கலாச்சாரத்தை அதிகப்படுத்தி வளர்த்து எடுப்பதில் திமுக, அதிமுக இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மது விற்பனையோடு இருந்தால் கூட ஓரளவு மது பழக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், மதுக் கடைகளுடன் பார்களை நடத்துவது தூண்டில் போட்டு குடிகார்களை அழைக்கும் முறையாகும்! ...

டாஸ்மாக் பார் ஏல அணுகுமுறையால் ஆளும் கட்சிக்குள் கொந்தளிப்பு! முதல்வர் குடும்பத்து செல்லப் பிள்ளையான செந்தில் பாலாஜி மூலம் ஓட்டு மொத்த டாஸ்மாக் பார்களையும் ஒரு சில கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கிறார்களா? கட்சிக்காரர்களையே காயடிக்கிறார்களா? ஆளும் கட்சித் தலைமை ஒரு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது என்பதற்கு டாஸ்மாக் பார் டெண்டர் விவகார அணுகுமுறையே சாட்சி!. கட்சித் தலைமையின் தலைக்குள் கார்ப்பரேட் முதலாளி வந்து உட்கார்ந்து கொண்டுள்ளதன் அடையாளமாகத் தான் இதை பார்க்க முடிகிறது என்கிறார்கள் இரண்டாம் கட்டத் தலைவர்கள்! மது என்ற போதை வஸ்துவின் அடித்தளத்தில் ...

இப்படி ஒரு கடைந்தெடுத்த பொய்யை எத்தனை நாள் பரப்புவார்கள்…? யாருக்கெல்லாம் வருமானம், யாருக்கெல்லாம் இழப்பு என விவாதிக்கலாமா..? பலனடைவது யார், பாதிக்கப்படுவது யார் எனப் பார்க்கலாமா…? மது அரசியலுக்கு பின்னுள்ள மர்மங்கள் விலகுமா..? பதவி ஏற்றது முதல் ஆட்சி மீது மதிப்பும், மரியாதையும் ஏற்படத்தக்க நிறைய அணுகுமுறைகளை பார்க்கமுடிகிறது! நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இறையன்பு, உதய சந்திரன் ஆகியோருக்கு முக்கியத்துவம் தந்தது, அறிவும், திறமையும், துணிச்சலும் ஒருங்கே பெற்ற அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மா.சுப்பிரமணியம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு..போன்றோரை அமைச்சர்கள் ...

கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே ஆட்டம் காண வைத்துவிட்டது என்று பிரதமர் மோடியே வேதனைப்பட்டு சொல்லும் அளவுக்கு நிலைமை தற்போது மிக மோசமாக உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. கொரோனா வின் இரண்டாவது அலை எவ்வளவு கொடூரமானது என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்து இந்நாட்டை பார்த்து மற்ற நாடுகள் எச்சரிக்கையாக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்துமே இந்திய பயணிகள் ...

டாஸ்மாக் மதுக்கடைகளால் பல்லாயிரக்கணக்கான பெண்களின் தாலி பறிபோனவண்ணம் உள்ளது. தமிழகம் இந்தியாவிலேயே அதிக விதவைகள் கொண்ட பிரதேசமாகிவிட்டது..! பல லட்சம் தமிழக இளைஞர்கள் உடல் நலமும், உள்ள நலமும் கெட்டு வேலை செய்யத் திரானியற்று குடும்பத்திற்கு பாரமாக வாழ்ந்து வருகின்றனர்.  நாட்டுக்கு பயன்பட்டிருக்க வேண்டிய இளைய தலைமுறையின் உழைப்பாற்றல் தெருப்புழுதியில் புரள்கிறது! இதனால் தான் வட மாநில தொழிலாளர்களின் உழைப்பை தமிழகம் சார்ந்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டது! தமிழகத்தின் உற்பத்தி திறனும், உழைக்கும் திறனும் ஆறாய் பெருக்கெடுத்தோடும் மதுக் கலாச்சாரத்தால் சூறையாடப்பட்டு வருகிறது! ...