படம் பார்த்த பிறகு அரைமணி நேரம் ஆகியது, அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டு மனம் சகஜ நிலைக்கு திரும்ப! பலருக்கும் இந்த அனுபவம் வாய்த்திருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த அளவுக்கு ரியலிஸ்டிக்காகவும், மையக் கதையில் இருந்து திசை மாறாமலும் ஜெய்பீம் எடுக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளை நம்மில் ஒருவராக மதிக்காமல் புறம் தள்ளி வந்துள்ள இந்த சமூகத்தின் இயல்பை காட்சிபடுத்தி இருப்பதன் மூலம் சமூக மனசாட்சியை தட்டி உலுக்குகிறது படம்! படத்தின் உண்மையான ஹீரோ கதைக்கரு தான்! அதற்கு அடுத்த முக்கிய கதாபாத்திரம் கதாநாயகி செங்கேணி தான்! அவள் ...