பதின்பருவத்தினர் எளிதில் உணர்ச்சிவசப் படுகின்றனர். தவறான ரோல் மாடல்களை பின்பற்று கின்றனர். உடல் உழைப்பை குறித்தோ, கடமைகள் குறித்தோ அறியாதவர்களாக வளர்கின்றனர். இவர்களிடம் சுமூகமான உறவைக் கட்டமைப்பதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் என்ன செய்யலாம்? தினச் செய்திகளில் குறைந்தது 2 செய்திகளாவது வன்முறை, தற்கொலை முயற்சி, திருட்டு, போதை பழக்கம் போன்ற பல குற்றங்களில் மாணவ/மாணவிகள் ஈடுபடும் செய்திகளை பார்க்க முடிகிறது. முக்கியமாக இவர்கள் அனைவருமே வளரிளம் பருவ வயதினராக இருக்கின்றனர். பொதுவாக நாம் எல்லாருமே குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.பிறகு வளர்ந்துவிட்ட பெரியவர்களூக்கு முக்கியத்துவம் ...
நீண்ட கால ஆசிரியர்களின் பணியிட மாற்றக் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்து இத்தனை நாள் ஆறப் போட்டுவிட்டு தற்போது அவசரம் காட்டினால் ஏற்படப் போகும் விபரீதங்களுக்கு யார் பொறுப்பேற்பது..? விருப்பப்பட்ட இடங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு ஏதுவாக வெளிப்படையான கலந்தாய்வு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முன்னெடுப்பால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. கணவன் ஓரிடத்தில், மனைவி ஓரிடத்தில் என குடும்பங்களை பிரிந்து பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் கேட்பதும், அந்தச் சூழ்லைப் பயன்படுத்தி கையூட்டு ஆதாயம் அடையும் அற்பர்களும் கல்வித் துறையில் ...
கேள்வி கேட்டு அறிவை விசாலப்படுத்துவது தான் கற்றலின் அடிப்படை இலக்கணம். ஆனால், ஆசிரியர்களையே கேள்வி கேட்கவோ, விபரம் தெரிந்து கொள்ளவோ வழியற்ற புள்ளி விபரப் புலிகளாக்கி வருகிறது கல்வித்துறை. அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகள் நிறைவேற்றத்திற்கும் ஆசிரியர்களே பலியாடுகள்! இதனால், அரசுப் பள்ளி ஆசிரியர்களை அரசாங்கம் அறிவிக்கப்படாத ஒரு கொத்தடிமையாக கருதுகிறதோ என்ற சந்தேகம் கூட அவ்வப்போது வரத் தான் செய்கிறது. பேரு தான் வாத்தியார்! ஆனா, வருஷம் முழுக்க எங்களுக்கு வழங்கப்படும் பணிகளைக் கேட்டால் மலைச்சு போயிடுவீங்க! சட்டமன்ற தேர்தலா? பாராளுமன்ற தேர்தலா? ...
தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள்; 7 ‘பள்ளிக் கூடம் சென்றோமா? மாணவர்களுக்கு பாடம் நடத்தினோமா?’ என்ற அளவோடு நிற்பதில்லை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை! சதாசர்வ காலமும் கற்பித்தல் அல்லாத பணிகள் ஏராளமாக தரப்படுகின்றன. இதில் EMIS பதிவேற்றம் என்ற டேட்டா என்ட்ரீஸ், கடும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்துகிறது, ஆசிரியர்களை! EMIS( Educational Management Information System) கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் . தலைப்பே சொல்கிறது , இது கற்பித்தல் பணி அல்ல , மேலாண்மைப் பணி என்பதை! பள்ளிகளில் ஒரு மாணவர் சேரும் பொழுதே அவருக்கு ...
தமிழகப் பள்ளிக் கல்வியின் சவால்கள் : 6 தமிழக அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்கள் பற்றாகுறை நிலவுகிறது. இன்னும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளா..? ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு ஆர்வமில்லையா? இது காலப் போக்கில் அரசுபள்ளிகளை காலாவதியாக்கும் சூழ்ச்சியா..? அரசு ஆரம்ப பள்ளிகளில் 1997 ஆம் ஆண்டு வரை இருபது மாணவர்க்கு ஒரு ஆசிரியர் என்ற அரசாணையே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், 1997 முதல் 1 : 40 என்று மாறியது. மாணவர் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டன. கல்வி உரிமைச் சட்டம் ...
எதிர்கால சமுதாயமான மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய கலங்கரை விளக்கங்களாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளால் ஆசிரியர் என்று மகத்தான சேவைத் தொழிலில் கறை படிய தொடங்கியுள்ளது. அனைத்து பணிகளிலும் உள்ளது போல ஆசிரியர் சமுதாயத்திலும் ஒருசில கரும்புள்ளிகள் உள்ளன. இப்படிப்பட்டவர்களின் செய்கைக்காக ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குறைகூறி மட்டம் தட்டி விட முடியாது. ஆசிரியர் பணியை தவம் போல் செய்கின்ற எண்ணற்ற பல ஆசிரியர்கள் இருக்கும்பொழுது இதுபோல ஒரு சிலரின் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டு விடுகின்றது. ...
பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அங்கன்வாடிகள் , மழலையர் வகுப்புகள், இன்னும் திறக்கப் படவில்லை! வரும் மாதங்களில் திறக்கலாம். மழலையர் பள்ளிகள் உருவாகத்தில் இதுவரை அரசுக்கு ஏனோ போதிய ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், மழலையர் பள்ளிகளை முறையாக கட்டமைக்காவிட்டால், இனி அரசு பள்ளிகளே கிடையாது…என கள நிலவரங்கள் சொல்கின்றன! தற்போதைய அரசுப் பள்ளிகளின் மழலையர் வகுப்புகளில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. குழந்தைகளையும்,பெற்றோர்களையும் ஈர்க்கும் வகையில் அவற்றை மாநிலம் முழுக்க முறைப்படுத்தப் பட வேண்டியது மிக அவசியம் மட்டுமல்ல, அவசரமானதும் கூட! தனியார் மயக் கல்வி தமிழகப் பள்ளிக் கல்வி ...
பள்ளிகள் திறக்கப்பட்டு 19 மாதங்களுக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் வருகின்றனர். நமது தமிழக முதல்வர் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளை வரவேற்று மிகவும் கனிவுடன் அறிவிப்பு தந்துள்ளார். பள்ளிகள் திறப்பையொட்டி கடந்த ஒரு வார காலமாகவே அதற்கான ஆயுத்தப் பணிகள் நடந்தன! தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மிகவும் கவனமாக திட்டமிடல் செய்தனர்! ஆயினும் அடிப்படை வசதிகற்ற நிலையிலும், ஆசிரியர் பற்றாக்குறைகளிலும், விதவிதமான சவால்களை சந்திக்கின்றனர். ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறெல்லாம் திட்டமிட்டனர், கள எதார்த்தம்,அவர்கள் சந்திக்கும் சவால்கள் ...
ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஆனால்,இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடும் பல்லாயிரகணக்கான அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள், துயரங்கள்,சொல்லமுடியாத வலிகள் பொது வெளிக்கு தெரிவதில்லை! இதைக் குறித்து உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள் என்று அவர்களைக் கேட்டிருந்தோம். வழக்கமான தேர்தல் பணி நடைமுறைகளைக் கடந்து தற்போதைய 2021 சட்டமன்றத் தேர்தல் பணிகள், பல அழுத்தங்களை ஆசிரியர்களுக்குத் தந்துள்ளதாக பரவலான கருத்துகள் தமிழகமெங்கும் இருந்து வந்துள்ளன..! அவற்றை இங்கு தொகுத்து தந்துள்ளோம். கடமையைச் செய்ய யாரும் மறுக்கவில்லை. ஆனால் ஆசிரியர்களை அதிக தூரம் அலைய வைப்பதுதான் ...