‘அந்தரி இல்லு’ டாக்டர் தம்பதிகளைப் பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது. பசித்தவர்கள் எந்த நேரமும் இங்கு சென்று உணவருந்தலாம். ஓய்வெடுத்துச் செல்லலாம்னு ஒரு ஏற்பாடு! இவங்க வாழ்க்கையே ஒரு செய்தின்னு சொல்லத் தோணுகிறது. தங்களுடைய வாழ்க்கையை பிறரோடு பகிர்ந்து கொள்கிறார்கள்! தங்களுடைய நேரத்தை இல்லத்தின் ஒரு பகுதியை, உழைப்பை, செல்வத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்! நமக்கு எவ்வளவோ உறவினர்கள் இருக்கலாம். நண்பர்கள் இருக்கலாம். ஆனால், எல்லோர் வீட்டிற்கும் போய்விட முடியுமா? போனால், அங்கு ஒரிரு நாட்கள் தங்குமளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? சுதந்திரமாக ...