தாஜ்மகால் இருக்கும் இடம் யாரிடம் இருந்து எப்படி வாங்கப்பட்டது? அங்கு இந்து கோயில் இடித்து கட்டப்பட்டதா? ராம் மற்றும் சூலம் குறியீடுகள் உள்ளனவே? தொல்லியல் ஆய்வுகள் சொல்வது என்ன? அங்குள்ள ரகசிய அறைகளில் என்னென்ன உள்ளன? இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் தயாளன் நேர்காணல்! ஷாஜகான் முறைப்படி இந்த இடத்தை வாங்கினாரா?  மத்தியப்பிரதேசத்தில் ஷாஜகான் மனைவி மும்தாஜ் இறந்த நிலையில் உடலை 6 மாதம் அங்கேயே பாதுகாத்து வைத்து இருந்தனர். மும்தாஜுக்கு  உலகம் போற்றும் நினைவுச் சின்னம் கட்ட வேண்டும் என்ற தேடலில், ...

இந்த அரசாங்கத்திற்கு இந்துக்கள் மீது கோபம் இருக்கிறது, துவேஷம் இருக்கிறது. அதனால், வெள்ளி,சனி, ஞாயிறு கோயில்களை பூட்டி வைக்கின்றனர் என்று நிச்சயமாக குற்றம் சாட்ட வாய்ப்பில்லை. தேர்தல் அறிக்கையிலும் சரி, பதவி ஏற்பிற்கு பின்பும் சரி இந்து அற நிலையத் துறைக்குத் தான் இந்த ஆட்சியாளர்கள் அதி முக்கியத்தும் கொடுத்து செயல்பட்டு வருகின்றனர்! எனில், கோயில்களை திறக்க எது உண்மையான தடை? இதன் பின்னணியில் இருப்பது யார் என பார்க்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்க சமரசமின்றி அமைச்சர் சேகர்பாபு தலைமையிலான அற ...

ஆட்சிக்கு வந்ததும், ”அர்ச்சகர், ஓதுவார்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்” என அறிவித்தது திமுக அரசு! அவ்வளவு தான்! பரம்பரை, பரம்பரையாக மட்டுமே இது வரை அர்ச்சகர் நியமனங்களை செயல்படுத்தும் கூட்டம் ”இது ஆகமவிதிகளுக்கு எதிரானது” என்று கோர்ட்டுக்கு சென்றுவிட்டது! ஆகமவிதி என்பது இறைவனை வழிபடும் பக்தி முறைகள் சம்பந்தமானதா..? அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பிழைப்பு தொடர்பானதா..? ஆகமவிதிகள் என்று சொல்லப்படுவது வழிபாட்டுத் தலங்களின் அமைப்பு பற்றியதாகும். கருவறையின் அமைப்பு, வழிபடும் சிலையின் வடிவமைப்பு, எந்தெந்த திசையில் என்னென்ன இருக்க வேண்டும். எப்படி வழிபாடு ...

‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பது சங்கராச்சாரியார் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியுள்ளது. அடாவடி அரசியல்வாதிகளான ஹெச்.ராஜா, குருமூர்த்தி புடை சூழ இராமேஸ்வரம் கோவிலில் ஆர்பாட்டமாக நுழைந்த சங்கராச்சாரியார் ஆகமவிதிகளை காலில் போட்டு மிதித்து, அத்துமீறி செயல்பட்டுவிட்டதாக ஆன்மீகவாதிகளே வருத்தப்படுகின்றனர். இது குறித்து சற்றே விபரமாகப் பார்ப்போம்; பக்தி, ஆன்மீக விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று இராமேஸ்வரம் ராம நாதஸ்வாமி கோவிலில் நடந்தேறியது! கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22 ந் தேதி காஞ்சி சங்கரமட பீடாதிபதி விஜயேந்திரர் பாஜகவின் ...