ஒட்டுமொத்த இந்தியாவே கொரோனாவில் அசைவற்றுக் கிடந்த மே மாதம் தமிழக நெடுஞ்சாலைத்துறை மட்டும் தகதகவென வேலைகளை செய்தது என்றால்.சும்மவா? ஒரு பக்கம் கொரானா மரணங்கள், மறுபக்கம் பொருளாதார பின்னடைவுகள்,வேலை இழப்புகள் என்று அல்லோகலப்பட்ட காலகட்டத்தில், ‘’ஆகா இது பொற்காலம் அள்ளுவோம் கோடிகளை’’ என தமிழக அரசு மட்டும் கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் எல்லாத் துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து அரசுப் பணிகளை கடந்த மே மாதம் முதல் செய்யத் தொடங்கி விட்டார்கள். பணிகளைச் செய்ய டெண்டர் விட்டால்தானே கமிஷன் பார்க்கமுடியும். ஆனால்,டெண்டராவது, ...