’’இன்சூரன்ஸ் பண்றீங்களா சார்…” என்று யாராவது கேட்டால் உஷாராகிவிடுங்கள்! இன்றைக்குப் பல இன்சூரன்ஸ்கள் தேவையற்றது. கட்டுபவர்களைவிட நடத்தும் முதலாளிகளின் லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டது.இதைப் படித்தால் இன்சூரன்ஸ் விஷயத்தில் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது. இன்சூரன்ஸ் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி ஆகும். இவை மத்திய அரசு நிறுவனமாகும். பல வருடங்கள் இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனமாகத் தனித்து செயல்பட்டுவந்தது. ஆனால், எல்.ஐ.சியை இருக்க 2000வது ஆண்டில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடங்கினார்கள். அன்று தொடங்கிப் பல ஆபத்துகளை இன்சூரன்ஸ்துறை சந்திக்கிறது! இன்று எல்.ஐ.சிக்கு போட்டியாக 24 தனியார் ...