அட இவ்வளவு பெரிய நடிப்புலக மாமேதைக்கு கொஞ்சம் கூட நடிக்கத் தெரியவில்லையே என்று நான் பல முறை வியந்திருக்கிறேன்! என்ன செய்வது? நடிகர் திலகம் சிவாஜியை நான் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு போதும் பார்த்ததில்லையே ! 1988 என்று நினைக்கிறேன்.அப்போது நான் விசிட்டர் பத்திரிகையில்,’ஒரு புகைப்படக் காரரின் பார்வையில்’ என்றொரு தொடர் எழுதி வந்தேன். தமிழக முன்னேற்ற முன்னணி என்ற ஒரு கட்சியை சிவாஜி தொடங்கிய நாள்! அன்று முழுக்க அவரோடு கழிந்தது. சிவாஜி, தன் வீட்டின் அந்த மிகப்பெரிய ஹாலில் அழகான இரண்டு ...