”தடுப்பூசியை விருப்பபட்டவர்கள் போட்டுக் கொள்ளட்டும். வேண்டாம் என்பவர்களை முட்டாள்களாகவோ,முரடர்களாகவோ நினைக்காதீர்கள்!” என்றால், ”நாங்கள் போட்டோம், எந்த பாதிப்புகளும் இல்லாமல் தானே இருக்கிறோம். நீங்கள் மட்டும் மறுத்தால் எப்படி?” என கேட்கிறார்கள்! ”சபாஷ் , உங்கள் பாணியிலேயே இதற்கு பதில் சொன்னால் ஏற்பீர்களா..?” பார்ப்போம். உலகில் 750 கோடி மக்கள் வாழ்கிறார்கள்! அவர்களில் இது வரை கொரோனாவில் 45,66,000 பேர் தான் இறந்துள்ளனர். பாதிப்பு வந்தவர்களில் குணமடைந்தவர்கள் 19,71,00,000. ஆக மிகக் குறைவானவர்கள் இறக்கக் கூடிய – பெரும்பாலானவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீளக் ...