அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தூள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில் The trail of Chicago 7 (சிகாகோ விசாரணை) என்ற ஆங்கிலப் படம் வெளிவந்ததானது, ஒரு வகையில் வெள்ளை நிறவெறி ஆதரவாளர்களின் முகத்திரையை கிழிக்க உதவியதன் மூலம் ஜோபிடன் வெற்றிக்கு ஒரளவு உதவியது என்றும் சொல்லாம்! 1968 ஆம் ஆண்டு  சிகாகோ நகரில் நடத்த கலவரத்தைத் தொடர்ந்து  நடந்த நீதிமன்ற விசாரணைதான், இந்தப் படம். ஆரோன் சொர்கின்(Aron Sorkin) என்பவர் திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார். இந்தியாவில் அக்டோபர் மாதம் வெளிவந்துள்ளது.நெட் பிளிக்சில் ...