’’மனு தர்மம் என்பதெல்லாம் காலாவதியான விவகாரம்! தற்போது இந்திய அரசியல் சட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது! ஆகவே, புழக்கத்தில் இல்லாத மனு நூலைப் பற்றி பேசி வீண் சர்சைக்கு வித்திடுவதா?’’ என்று ஒரு பக்கம் வியாக்கியானம் தந்துவிட்டு, மறுபுறம் மானுட தர்மத்திற்கு எதிரான மனு தர்மத்தை புகழ்ந்தும், நியாயப்படுத்தியும் தினமணியில் நடுப்பக்க கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். ’மனு தர்மமும், ஹிந்துமதமும்’ ’மனு ஸ்மிருதியில் பெண்கள்’ ஆகிய கட்டுரைகள் சமீபத்தில் வெளியாகின! அதாவது சூத்திரர்களைக் கொண்டே சூத்திரர்களை இழிவுபடுத்தும் நூலை ...