உலகின் பணக்கார கோவில் திருப்பதி. எங்கு அளவின்றி செல்வம் குவிகிறதோ, அங்கு குற்றங்களுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது லட்டுக்கான நெய்யில் கலப்படம்! ஆனால், இது மட்டுமின்றி, உண்டியல் பணம், நகை தொடங்கி நுழைவு சீட்டு பணவசூல், கட்டுமானங்கள் வரை ஒவ்வொன்றிலும் முறைகேடுகள் நடப்பது குறித்த ஒரு அலசல்; தினமும் 70,000 முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் வரை திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானுக்கு பக்தர்கள் தங்களின் வேண்டுதல் படி காணிக்கையை அளித்து மகிழ்கின்றனர். உண்டியல் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ...