‘ஆட்டோகிராப்’ படத்தில்  சேரன் முந்தைய காதலிகளை நினைவு கூர்வார்.  கிட்டத்தட்ட அந்த சாயலில்  ஆணுக்கு மாற்றாக ஒரு பெண்ணை மையப்படுத்தி வந்துள்ள இந்திப் படம் – three of us. கல்லூரி செல்லும் மகன் உள்ள ஒரு பெண்ணின்  பால்ய காலமும், நிகழ் காலமும் காட்சி மொழியில் விரியும் கவித்துவமாகிறது! ஷைலஜா மத்திய வயதைக் கடந்த ஒரு பெண். அவளுக்கு ஏற்பட்டுள்ள மறதி நோயின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறுகிறாள். கல்லூரியில் படிக்கும் மகனைக் கூட மறந்து போகும் நிலை அவருக்கு வரலாம். ...