”எப்படி சார் கருத்தியல் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட துக்ளக்கில் வேலை  பார்த்தீங்க..?” என்பது அடிக்கடி நான் சந்திக்க நேரும் கேள்வி! நான் துக்ளக்கில் ஒரு முழு நேர பத்திரிகையாளராக பணியாற்றவில்லை. நான் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனாக தொடர்ந்து சுமார் ஒன்பதாண்டுகள் எழுதினேன். அதற்கும் முன்பாக துக்ளக்கிற்கு ஒரு போட்டோ ஜர்னலிஸ்டாக நிறைய வேலை செய்துள்ளேன். 1985 ல் ஜனசக்தியிலேயே எழுத ஆரம்பித்த நான் துக்ளக்கில் 1996ல் தான் எழுதத் தொடங்கினேன். எனக்கும் துக்ளக் ஆசிரியர் குழுவிற்கும் பரஸ்பர புரிதல் வருவதற்கே சில ஆண்டுகளாயின! என்னை ...

வாசிப்பால் வளர்கிறோம் என்பதற்கு என் வாழ்க்கையே ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்! ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். நாளும் ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். எதிர்காலம் என்னவென்றே அறியாத தற்குறியாக இருந்த என்னை வாசிப்பு தான் வளர்த்தது. தன்நம்பிக்கை தந்தது! பல பெரிய ஆளுமைகளின் நட்பை பெற்றுத் தந்தது! அனைவரும் அறிந்திருக்கக் கூடிய பத்திரிகையாளனாக மாற்றி இருக்கிறது. அன்னைக்கு அடுத்தபடியாக என்னை வளர்த்தவை புத்தகங்களே…! எட்டு வயதில் எனக்கு வாசிப்பு பழக்கம் தோன்றியது. என் வகுப்பு தமிழ் பாட நூல்களை நான் உண்மையிலேயே விரும்பி படித்தேன். ...