கடந்த சில நாட்களாக வட இந்திய ஊடங்கங்கள் பிரேக்கிங் நியூசாகவும்,தலைப்புச் செய்தியாகவும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையே பாராட்டுவதாக சொல்லி வரிக்கு,வரி அந்த டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையை வாசித்தும், மறுபிரசுரம் செய்தும் புகழ்ந்து தள்ளிவிட்டன! ”உலகமே யோகியைக் கொண்டாடுகிறது….! உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது…!’’ என்றெல்லாம்.. ஒரே பாராட்டு மழை தான்! உ.பி.மக்களே ஒரு கணம் அசந்து போய்விட்டார்கள்! ஏதோ நாம் தான் நமது முதல்வரை தவறாக புரிஞ்சிக்கிட்டோமா…? அமெரிக்க பத்திரிக்கையே இப்படிப் பாராட்டுதே…என்று நினைத்துவிட்டார்கள்! கொரானா காலத்தில் ...