பாராளுமன்றத்தில் தன் அறிவார்ந்த, துணிவான பேச்சுக்களால் பெரும் கவனம் பெற்றுள்ளார் திரிணமுள் எம்.பி மஹீவாமொய்த்ரா! அநீதிகளைச் சாடுவதில் காட்டாற்று வெள்ளமென பொங்கி பிரவிக்கும் மொய்த்ரா இந்திய அரசியலின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுகிறார்! இவரது பின்னணி தான் என்ன? மஹீவா மொய்த்ராவின் பேச்சுக்கள் எப்போதுமே ஆவேசமாக அமைந்துவிடுகின்றன! அதற்கு அவர் மட்டுமல்ல, அவர் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட்டும் ஒரு காரணமாகிவிடுகிறது. வங்க மண்ணில் ஒரு பெண் சிங்கமாக மம்தா கர்ஜித்துக் கொண்டிருக்க அதே மண்ணில் மற்றொரு பெண் சிங்கமாக தில்லி பாராளுமன்றத்தில் கர்ஜித்து வருகிறார் ...