தமிழகத்தில் அரசு பழங்குடிகளையும், காடுகளையும் கையாளும் முறை மிக மோசமாக உள்ளது. கல்வி,பொருளாதாரம்,சூழலியல் பாதுகாப்பு,அடிப்படைத் தேவைகளுக்கான ரேஷன் பொருள்கள் பெறுவது, ஓட்டுப் போடுவது என எல்லாவற்றிலும் தமிழக பழங்குடிகள் சந்திக்கும் பிரச்சினைகளை சொல்கிறார் சிவ சுப்பிரமணியன். பழங்குடிகளே காடுகளைப் பாதுகாக்க முடியும் வனத்துறை வேலைக்குக் கேரளா, கர்நாடகா அரசுகள் 60 சதவிகிதம் அந்த மாநில பழங்குடிகளையே நியமனம் செய்கின்றன.. ஆனால் தமிழ்நாடு அந்த காடுகளை பற்றி அனுபவமே இல்லாத நபர்களை நியமிக்கிறார்கள். நகர்புரத்தில் இருப்பவருக்குக் காட்டிற்குள் வேலை கொடுக்கிறார்கள்.அவரால் காட்டிற்குள் என்ன வேலை செய்ய முடியும்? காடு,விலங்குகள் பற்றிய எந்த வித அனுபவமும் இல்லாத, ...
நீட் தேர்வை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்றால், ’’நிச்சயமாக எதிர்க்கிறேன்’’ என்பது தான் என்னுடைய பதில்! ’’கல்வி என்பது மாநில அதிகாரத்தில் இருக்க வேண்டுமா? மத்திய அதிகாரத்தில் இருக்க வேண்டுமா?’’ என்றால்,சந்தேகமே இல்லாமல் சொல்வேன்; ’’மாநில அரசின் அதிகாரத்தில் இருக்க வேண்டும்! அதே சமயம் ,மத்திய அரசிடம் ஆலோசனை கலந்து செயல்பட வேண்டும்!’’ ஆனால்,தற்போது தமிழகத்தில் நடைபெறும் நீட் தொடர்பான உணர்ச்சிகரமான அரசியல் நாடகங்கள் சகிக்க முடியாதவை! கடந்த மூன்றாண்டுகளில் அனிதா தொடங்கி தற்போது ஜோதி துர்கா,ஆதித்யா,மோதிலால் வரை 16 மாணவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்? யார் இதற்குப் பொறுப்பேற்பீர்கள்? ...