தனக்கு முடிவெடுக்க அதிகாரமற்ற ஒரு விவகாரத்தில் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு வருஷக்கணக்கில் கமுக்கமாக இருந்த கவர்னரின் பெருந்தன்மையை என்னென்பது? அவருக்கு அதிகாரம் இருக்கிறதா எனத் தெளிவு பெறாமலே அவரிடம் ஒரு மனுவைத் தந்து வருடக்கணக்கில் காவடிதூக்கி, கை கூப்பிய ஆட்சியாளர்களின் ஆண்மையை என்னென்பது? முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத கவர்னர் மூன்று நாட்களில் முடிவெடுப்பார் என நீதிமன்றத்திற்கு உத்திரவாதம் வழங்கிய மத்திய அரசின் சொலிடர் ஜெனரலின் சட்ட அறிவை என்னென்பது? முடிவெடுக்க அதிகாரமில்லாத கவர்னருக்கு ஒரு வாரக் கெடு கொடுத்து, ”ஐயா உடனடியாக முடிவெடுத்து ...

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் பெயராலும், சமூக நீதியின் பெயராலும் நடக்கும் தமிழகத்தில் நடக்கும் படு அயோக்கியத்தனமான ஒன்று தான் 7.5% உள் ஒதுக்கீடாகும்! இதை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் கள யார்த்தம் தெரியாமல் கண்மூடித்தனமாக அரசு பள்ளி ஏழை,எளிய மாணவர்கள் பலன்பெற வேண்டும் என்ற கோணத்தில் ஆதரிக்கின்றார்களேயன்றி, ’’ உண்மையிலேயே பெற வாய்ப்புள்ளதா?’’ என யோசிக்கவேயில்லை! பொதுவாகப் பார்த்தால் கவர்னரின் காலதாமதம் நமக்கு ஒரு பெரும் கோபத்தைத் தான் ஏற்படுத்தும்! ஆனால், நாம் கோபப்பட வேண்டியது கவர்னரின் மீதல்ல! கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கழிசடையாக்கி வைத்துள்ள நம் ஆட்சியாளர்களின் மீது தான்! அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் ...