பல நூறு கோடி செலவில் அள்ளி இரைக்கப்படும் தமிழக அரசின் அளவுக்கு மீறிய சுய விளம்பரங்கள் ஒரு வகையில் அதன் பலவீனத்தையும், பதற்றத்தையும் தான் உணர்த்துகின்றன. நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று கூவிக் கூவி தம்பட்டமடிப்பதன் மூலம் தன் குற்றவுணர்வை மறைக்க துடிக்கிறது எடப்பாடி அரசு. ஒரு நல்ல அரசுக்கு, அரசினால் பலன் பெற்ற மக்களின் உணர்வுகளும், உள்ளார்ந்த பேச்சுக்களும் தான் விளம்பரமாகும்! அதை தன் செயலின் மூலமாக செய்யத் தவறிய அதிமுக அரசு விளம்பரங்களின் மூலமாக அந்த உணர்வை செயற்கையாக ...