விசாரணை குழுவாம்! ஆறுபேர் கமிட்டியாம்! எதற்காக..? பிரச்சினையை ஆறப்போடவா..? அதுவும் இந்த விசாரணை அறிவிப்பே சும்மா வரவில்லை ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் கொந்தளிக்க தொடங்கியதும் தான் இந்த அறிவிப்பு! தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை தரும் ஒரு சாதாரண மனிதன் பிடிபட்டால் லாக்கப் டெத், எண்கெளண்டர், கை,காலை உடைத்து கட்டுப்போட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நீதிபதியிடமே பொய் வாக்குமூலம்..என்னென்ன நாடகங்கள் அரங்கேறும்! மக்களும் ஏதோ நீதி நிலை நாட்டபட்டால் சரி தான் என விசில் அடித்து,கைதட்டி ஆரவார வரவேற்பு தருவார்கள்! பலமுறை பாலியல் புகாருக்கு ...